Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிரை பார்த்து பேச வேண்டும் என்ற பாசத்தில் கோமதி அம்மா பாண்டியன் வீட்டுக்குள் வந்து விட்டார். வந்ததும் அனைவரிடமும் பேசி பாசத்தைக் காட்டி பழைய விஷயங்களை ஞாபகப்படுத்தி பேசி அனைவருடனும் சேர்ந்து அரசி போட்டோ எடுத்துக் கொள்கிறார். இருந்தாலும் அம்மாச்சிக்கு மனசுக்குள் ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதாவது நாம் இங்கு வந்தது சக்திவேல் மற்றும் முத்துவேலுக்கு தெரிந்து விட்டால் இதை வைத்து பிரச்சினை பண்ணுவாங்க என்று பயத்திலேயே வீட்டுக்கு போகிறேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். ஆனால் மீனா நான் செந்திலுக்கு போன் பண்ணி நீங்க வந்து இருப்பதை சொல்லி இருக்கிறேன். அவரும் வந்து உங்களுடைய பாசத்தை பகிர்ந்து கொள்ளட்டுமே கொஞ்ச நேரம் இருங்க என்று சொல்கிறார்.
ஆனால் அம்மாச்சி நேரம் ஆகிவிட்டது அவங்க வந்து விடுவாங்க என்று சொல்லி கிளம்பி அனைவரும் வாசலுக்கு வந்து விட்டார்கள். அந்த நேரத்தில் பாண்டியன், சரவணன் மற்றும் செந்திலும் வந்துவிடுகிறார்கள். பாண்டியனை பார்த்ததும் எல்லோரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். எங்கே இதை வைத்து பிரச்சினை பண்ணி விடுவாரோ என்று பயந்த நிலையில் பாண்டியன் வாங்க ஏன் வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.
உள்ளே வந்து பேசுங்கள் என்று சொல்கிறார். ஆனால் கோமதி அம்மா இருக்கட்டும் பரவாயில்லை என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது அந்த இடத்திற்கு சக்திவேல் மற்றும் முத்துவேல் வந்து விடுகிறார்கள். வந்ததும் முத்துவேல் ஆவேசமாக பேசி நான் இல்லாத போது இது எத்தனை நாளாக நடக்கிறது. என்ன திடீரென்று மகள் மீது பாசம் வந்து விட்டதா என்று வார்த்தையால் அம்மாவை நோகடித்து பேசுகிறார்.
முத்துவேலுடன் சேர்ந்து சக்திவேலும் வாய்க்கு வந்தபடி பேசி அம்மாவை நோகடித்து கஷ்டப்படுத்துகிறார்கள். இதனை பார்த்து பொறுக்க முடியாத பாண்டியன், கொஞ்சம் நிப்பாட்டுங்க நானும் பார்த்துகிட்டே இருக்கிறேன் ஓவராக தான் பேசுகிறீர்கள். கொஞ்சமாவது மனசுல அம்மா என்கிற நினைப்பு இருக்கிறதா? அவங்க அப்படி என்ன தப்பு பண்ணிட்டாங்க.
நீங்கதான் தங்கச்சி வேண்டாம் என்று 30 வருஷமாக ஒதுக்கி வைத்தீர்கள் என்றால், உங்க அம்மாவால எப்படி இருக்க முடியும் கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தீர்களா? என்று மாமியாருக்கு சப்போர்ட் பண்ணி மச்சான்களிடம் மல்லு கட்ட போய்விட்டார். ஆனால் கடைசியில் முத்துவேல், என்னுடைய கௌரவத்தையும் பேச்சையும் கேட்பதாக இருந்தால் மட்டும் இந்த வீட்டுக்கு வா.
இல்லையென்றால் நீ அங்கேயே இருந்துக்கோ என்று கோபமாக சொல்லிவிடுகிறார். உடனே பழனிச்சாமி எங்க அம்மாவுக்கு யாரும் இல்லை என்று நினைக்கிறீர்களா?? நான் இருக்கிறேன் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் சக்திவேல், நீயே அந்த வீட்டில ஒரு தண்டமாக இருக்கிறாய். இதில் நீ எப்படி பார்த்துக் கொள்வாய் என்று கேட்கும் பொழுது பாண்டியன் என் மாமியாரை நான் பார்த்துக் கொள்வேன் என்று வீட்டிற்கு கூப்பிட போகிறார்.
ஆனால் கோமதி அம்மா மகளா மகனா என்ற பாசத்தில் முடிவெடுக்க தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் இந்த முறை பாண்டியன் வீட்டிற்கு அம்மாச்சி போனால் மட்டும்தான் இன்னும் கதை விறுவிறுப்பாக அமையும் கலகலப்பாகவும் இருக்கும்.