சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பாண்டியன் போட்ட மாஸ்டர் பிளான்.. கதிருக்காக அப்பாவிடம் உண்மையை சொல்ல போகும் ராஜி

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், குமரவேல் ராஜியை அடிக்கும் பொழுது தெரியாத்தனமாக பாண்டியன் நடுவில் வந்ததால் முதுகில் அடி விழுந்துவிட்டது. இதை பார்த்த கதிர் கோபத்தில் ராஜி குடும்பத்துடன் சண்டை போட்டார். ஆனால் பாண்டியன் கதிரை தடுத்து உள்ளே கூட்டி போய்விட்டார்.

பிறகு குமரவேலிடம் அடி வாங்கிய ராஜியை கதிர் சமாதானப்படுத்தி ஆறுதல் கூறினார். அந்த நேரத்தில் கதிரின் உண்மையான பாசம் மற்றும் காதல் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்தது. இதனை அடுத்து அப்பாவை அடித்து விட்டார் என்று தெரிந்ததும் பாண்டியனின் மூன்று மகன்கள் கோபத்துடன் ராஜியின் அண்ணனை அடிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்கள்.

அதனால் ராஜியின் அண்ணனை அடித்து விட்டார்கள். பிறகு குமரவேலின் நண்பர்கள் ராஜியின் அண்ணனை காப்பாற்றி சக்திவேல் வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள். வந்ததும் பாண்டியனின் மூணு மகன்கள் குமரவேலை இப்படி அடித்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள்.

இதை கேட்டு கோவப்பட்ட ராஜியின் சித்தப்பா திருப்பி அடிப்பதற்கு அருவாளை தூக்கிட்டு போகிறார். ஆனால் ராஜியின் அப்பா அவரை தடுத்துவிட்டு கல்யாண மாப்பிள்ளை இந்த நேரத்தில் ஜெயிலுக்கு போனால் தான் அந்த குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பார்கள்.

அப்பாவிடம் உண்மையை சொல்லப் போகும் ராஜி

அதனால் போலீஸிடம் ஒப்படைத்து விடலாம் என்று ராஜியின் அப்பா பாண்டியனின் மூன்று மகன்கள் மீது புகார் கொடுத்து விட்டார்கள். அதன் படி சரவணன், கதிர் மற்றும் செந்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் பாண்டியன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்.

ஆனால் போலீஸ், இவர்கள் மூன்று பேரும் மீது புகார் வந்திருக்கிறது. அதனால் கோர்ட்டில் ஆஜர் படுத்தி விடுகிறேன். நீங்கள் அங்கு வந்து என்ன வேணாலும் பேசிக்கோங்க என்று சொல்கிறார். இதன் பிறகு தான் பாண்டியனின் பவரை காட்டப் போகிறார். அதாவது மகன்களுக்காக பக்கவாக பிளான் போட்டு காப்பாற்ற போராடப் போகிறார்.

அதே நேரத்தில் ராஜியும், கதிர் மேல இருக்கும் கோபத்தினால் தான் அப்பா இந்த மாதிரி பண்ணி இருக்கிறார் என்று அப்பாவை நேரில் சந்தித்து பேச போகிறார். போனதும் நடந்த அனைத்து விஷயங்களையும் அப்பாவிடம் சொல்லி புரிய வைத்து கதிரை காப்பாற்றுவதற்கு முயற்சி எடுக்கப் போகிறார்.

Trending News