ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கணவன் குடும்பத்தை கஷ்டப்படுத்திய பாண்டியனின் வாரிசு.. நாத்தனார் வாழ்க்கையை சரி செய்யப் போகும் மருமகள்கள்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டில் மூன்று மருமகளுக்கும் தாலி பெருக்கு பங்க்ஷன் நல்லபடியாக முடிந்து விட்டது. அதனால் ராஜியை பார்க்க வேண்டும் என்று அப்பத்தா ஆசை பட்டு காத்துக் கொண்டிருக்கிறார். இது தெரிந்த தங்கமயில், ராஜி மற்றும் கதிரிடம் அப்பத்தா உங்களை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார் போய் பாத்துட்டு வாங்க என்று சொல்கிறார்.

உடனே ராஜியை கூட்டிட்டு கதிர் வாசலுக்கு போகிறார். போனதும் ராஜின் அப்பா முத்துவேலு வந்து விடுகிறார். ஆனால் ராஜி கையெடுத்து கும்பிட்டு கேட்டதால் முத்துவேலு எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விடுகிறார். அடுத்ததாக ராஜி கதிர் இருவரும் சேர்ந்து அப்பத்தாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களைப் பார்த்த பாண்டியனும் எதுவும் சொல்லாமல் கோமதிடம் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள் என்று சொல்லி போய் விடுகிறார். உடனே இது தான் சான்ஸ் என்று கோமதி மற்ற பிள்ளைகள் எல்லாத்தையும் வர வைத்து அப்பத்தா காலில் விழுந்து ஆசீர்வாதத்தை வாங்க சொல்கிறார். அப்படி ஒட்டுமொத்த குடும்பமும் அப்பத்தா வீட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது சக்திவேல் வந்து விடுகிறார்.

உடனே அனைவரும் கோமதி வீட்டுக்குள் கூட்டிட்டு போய்விட்டார். ஆனால் வீட்டுக்குள் போன சக்திவேல், அப்பத்தாவை திட்டுகிறார். அப்பொழுது முத்துவேலு, பிள்ளை பேத்தி பாசம் தான் முக்கியம் என்று நினைத்தால் நான் இந்த வீட்டை விட்டு போய் விடுகிறேன். நீங்கள் என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்று கோபமாக திட்டிவிட்டு போய்விடுகிறார்.

அடுத்ததாக வீட்டுக்கு வந்த பாண்டியனிடம் பிள்ளைகள் அனைவருக்கும் அம்மாவின் ஆசிர்வாதம் கிடைத்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன், ரொம்பவும் உறவாட வேண்டாம். உங்க அண்ணனுக்கு தெரிஞ்சுச்சுன்னா தேவையில்லாத பிரச்சினை வரும் என்று சொல்கிறார். அதற்கு ராஜி இனிமேல் நான் பார்த்து கவனமாக இருக்கிறேன் மாமா என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு குழலி, அப்பா எனக்கு ஏதாவது வாங்கிட்டு வந்தீங்களா என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் உனக்கும் உன் வீட்டு குடும்பத்திற்கும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார். உடனே குழலி, புகுந்து வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் சேர்ந்து கொடுமைப்படுத்துகிறார்கள். ஒவ்வொரு நாளும் அங்கே டார்ச்சரை அனுபவிக்கிறேன் என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் பொய் சொல்லி பாண்டியனை கோபப்படுத்தி விட்டார்.

உடனே பாண்டியன், குழலியின் புகுந்து வீட்டில் போய் விசாரிக்கப் போகிறார். ஆனால் அங்கே போய் பேசிய பிறகுதான் தெரிய வருகிறது குழலி தான் அனைவரையும் டார்ச்சர் பண்ணி இருக்கிறார் என்று குழலி எல்லோரையும் கஷ்டப்படுத்தியதை போட்டு உடைக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன பாண்டியன் எதுவும் பேச முடியாமல் மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு திரும்புகிறார்.

வீட்டுக்கு வந்து பாண்டியன் எல்லா உண்மையும் சொன்ன பிறகு பாண்டியனின் மருமகள் அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த வகையில் நாத்தனாருக்கு என்ன பிரச்சனை அதை தெரிந்து கொண்டு சரி செய்ய வேண்டும் என்று மூன்று மருமகளும் சேர்ந்து முடிவெடுத்து இருக்கிறார்கள். அதன்படி குழலி வாழ்க்கையை சரி செய்து மறுபடியும் புகுந்து வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவார்கள்.

Trending News