தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் ஒரு காலத்தில் கலக்கியவர் பாண்டியராஜன். இவருக்கு அந்த காலத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் காரணம் அவரது வெகுளித்தனமான பேச்சும் குறும்புத்தனமான சேட்டைகள் தான்.
அவர் குள்ளதனமான உருவத்தால் நீயெல்லாம் படங்களில் கதாநாயகனாக நடிக்க முடியாது என பல இடங்களில் நிராகரித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பாண்டியராஜன் தன் மீது இருக்கும் நம்பிக்கையில் மீண்டும் பல இடங்களில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பையும் நடிப்பதற்கான வாய்ப்பு தேடி சென்றார்.
அதன் பலனாக ஆண்பாவம் மற்றும் பாட்டி சொல்லை தட்டாதே போன்ற படங்கள் வெற்றி மூலம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். பிரபு மற்றும் ரேவதியை வைத்து பாண்டியராஜன் இயக்கிய கன்னிராசியில் திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி இவர் திறமையை இவ்வுலகிற்கு எடுத்துக்காட்டியது.
அதன்பிறகு இவர் இயக்கி நடித்த ஆண்பாவம் திரைப்படம் 225 நாட்களுக்கு மேல் ஓடி தமிழ் சினிமாவில் ஒரு சாதனை படைத்தது. இந்த வெற்றியின் அடையாளமாக பாண்டிராஜ் எனும் பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஆண்பாவம் திரைப்படம் தான்.
சமீபத்தில் தேசிய குறும்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் சாதாரண மனிதனாகவும் ஒரு காமெடி நடிகனாக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் மூன்று பல்கலைக்கழகங்களில் பகுதி நேர ஆசிரியர் வேலை பார்த்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சினிமா ஒரு நல்ல தொழில் அதை நம்பி அவர்கள் யாரும் இதுவரை வெற்றி பெறாமல் இருந்ததில்லை எனவும்,ஒரு சிலர் வெற்றி பெறாமல் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
நான் ஆண்பாவம் என்ற படத்தை எடுத்தேன் அந்த படத்தில் வந்த வருமானத்தில் வீடு மற்றும் கார் திருமணம் அனைத்தையும் ஒரே படத்தின் வருமானத்திலேயே செய்து முடித்தேன் என தெரிவித்தார் .
உழைப்பால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என நம்பி வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒருகாலத்தில் கஷ்டப்பட்டவர்கள் தான் என தெரிவித்துள்ளார்.