சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

குமரவேலுவின் கோமாளித்தனத்தால் சிக்கலில் மாட்டிய பாண்டியன்.. பொண்டாட்டியிடம் தஞ்சம் அடைந்த சரவணன்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் மகன் சரவணனுக்கு கல்யாணம் ஆகாமல் குடும்பத்தில் இருப்பவர்கள் முன்னாடி அவமானப்பட வேண்டும் என்று ராஜியின் அண்ணன் குமரவேலு பிளான் பண்ணினார். அதற்காக தங்கமயிலை மண்டபத்தில் இருந்து கடத்திட்டு வந்தால் கல்யாணம் நின்று விடும் என்று நினைத்தார்.

ஆனால் கடைசியில் அவர் செய்த காரியம் கோமாளித்தனமாக முடிந்து விட்டது. அதாவது கடத்த வந்த ஆட்கள் மணப்பெண் யார் என்று தெரியாமல் ராஜி மற்றும் மீனாவை தூக்கி விட்டார்கள். இதனால் மண்டபத்தில் ராஜி, மீனாவை காணும் என்று கோமதி தேடுகிறார். பிறகு பாண்டியன், கதிர் மற்றும் செந்திலிடம் சொல்கிறார். எல்லோரும் ஒரு பக்கம் மண்டபத்தில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்

இதனை தொடர்ந்து மீனா மற்றும் ராஜி கண்விழித்து பார்க்கும் பொழுது யாரோ கட்டிப் போட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்து விட்டது. கடத்தி வந்த மணப்பெண்ணை பார்ப்பதற்காக குமரவேலு முகமூடியை போட்டுக்கிட்டு உள்ள போய் பார்க்கிறார். பார்த்ததும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் வெளியே போய் கடத்தின ஆட்களை அடிக்கிறார்.

அத்துடன் அவர்கள் மணப்பெண் கிடையாது விட்டுவிடு என்று சொல்கிறார். உடனே அடியாட்கள் அவர்களை கட்டி வைத்திருந்த கயிற்றை கழட்டி விடும் போது ராஜி உங்களை யார் கடத்த சொன்னார் என்று கேட்டதும் குமரவேலு தான் என்று உண்மையை சொல்லி விடுகிறார். பிறகு வெளியே வந்து பார்த்த ராஜி மற்றும் மீனா குமரவேலுவிடம் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா.

நீ பண்ணின காரியத்தை வீட்டில் சொன்னால் என்ன ஆகும் தெரியும்ல என்று மிரட்டுகிறார்கள். ஆனால் இப்போது சொன்னால் கல்யாணத்தில் ஏதாவது பிரச்சனை தேவையில்லாத குழப்பங்கள் வரும் என்று மீனா ராஜி யாரிடமும் சொல்லாமல் மறைக்கப் போகிறார்கள். இதனை தொடர்ந்து பாண்டியன் ஆசைப்பட்டபடி சரவணன் கல்யாணம் தங்கமயில் உடன் முடிந்து விடுகிறது.

ஆனால் இதன் பிறகுதான் பாண்டியன் குடும்பம் சிக்கலில் சிக்கி தவிக்கப் போகிறது. ஏனென்றால் தங்க மயிலின் குடும்பமும் சரி, தங்கமயிலும் பேராசை பிடித்தவர்கள். பொய்ப்பித்தலாட்டம் பண்ணி மற்றவர்களை ஏமாற்றும் 1ம் நம்பர் ஃபிராடு குடும்பம். இவர்களிடம் மாட்டிக் கொண்ட பாண்டியன் குடும்பம் இன்னும் என்னென்ன அவஸ்தை எல்லாம் படப்போகிறதோ பொருத்திருந்து பார்க்கலாம்.

Trending News