வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

Pandian Stores 2: செந்தில் கதிரை ஒதுக்கிய பாண்டியன்.. மாமியாரை மறந்து அம்மாவிடம் பாசத்தை பொழிந்த மீனா

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் கல்யாண பத்திரிக்கையை மீனா முறைப்படி அம்மா அப்பாவிடம் கொடுத்துவிட்டு வரவேண்டும் என்று செந்திலை கூட்டிட்டு போகிறார். ஆனால் போன இடத்தில் மீனாவின் அப்பா மரியாதை கொடுக்காமல் கதவை சாத்தி அவமானப்படுத்தி விட்டார்.

இதனால் நொந்து போன மீனா வீட்டிற்கு வந்து மாமியார் கோமதி இடம் அழுது புலம்பி விட்டார். உடனே மீனாவை ஆறுதல் சொல்லி கோமதி சமாதானப்படுத்தினார். இருந்தாலும் வீட்டிற்கு வந்த மருமகள் மீனா இப்படி அழுதது எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கோமதி, ராஜியிடம் சொல்கிறார்.

உடனே மீனாவிற்கு தெரியாமல் கோமதி, ராஜியை கூட்டிட்டு மீனாவின் வீட்டிற்கு போகிறார். போனதும் இவர்களை பார்த்த மீனாவின் அப்பா எதுவும் சொல்லாமல் உள்ளே போய்விட்டார். அப்பொழுது வெளியே வந்த மீனா அம்மாவிடம் உங்க பொண்ணு ரொம்பவே நல்ல மருமகளாக எங்களுடன் இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு பெண்ணை நாங்கள் தேடிப் பார்த்து இருந்தாலும் கிடைத்திருக்க மாட்டார்.

புகுந்த வீட்டை சொர்க்கமாக நினைக்கு மீனா

ரொம்பவே நல்லா வளர்த்திருக்கீங்க. ஆனால் அப்படிப்பட்ட மீனா எங்க வீட்டுக்கு வந்து இதுவரை அழுததை நாங்கள் பார்த்ததே இல்லை. இப்பொழுது நீங்கள் சரியாக பேசவில்லை என்று என்னிடம் வந்து அழுது புலம்புகிறார். தயவு செய்து மீனாவுக்கு எந்த தண்டனையும் கொடுத்து விடாதீர்கள். ஏன் நிலைமை அவளுக்கு வேண்டாம் என்று மீனாவின் அம்மாவிடம் கெஞ்சி பேசிய பின் கிளம்பி விடுகிறார்.

பிறகு இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட மீனா, மாமியாரிடம் எனக்கு அவர்கள் பாசம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இப்படி ஒரு மாமியார் குடும்பம் கிடைத்தது எனக்கு பெரிய சந்தோஷம் என்று சொல்லி, நீங்கள் தான் எனக்கு அம்மா என்று கோமதியை அம்மாவாக நினைத்துக் கொண்டார்.

இதனை தொடர்ந்து சரவணன் கல்யாணத்தை மிக ஜோராக நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதுவும் தங்கமயில் ஆசைப்படி மெஹந்தி பங்க்ஷன் வைத்து மூன்று நாள் விசேஷமாக இருக்க வேண்டும் என்று சரவணன் நினைக்கிறார். இதை தெரிந்து கொண்ட பாண்டியனும் அப்படியே பண்ணி பிரம்மாண்டமாக ஆக்கி விடுவோம் என்று சொல்கிறார்.

உடனே மீனா இதெல்லாம் பண்ணுவதற்கு நிறைய பணம் தேவைப்படும் நல்லா யோசிச்சுக்கோங்க என்று சொல்கிறார். அதற்கு பாண்டியன் மூன்று பையன்கள் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம் இருக்கிறது. இதில் செந்தில் மற்றும் கதிர் எந்த செலவும் வைக்காமல் கல்யாணம் பண்ணி விட்டார்கள்.

அதனால் அந்த பணத்தையும் சேர்த்து வைத்து சரவணன் கல்யாணத்தை பெருசாக பண்ணிவிடலாம் என்று பாண்டியன் சொல்லிவிடுகிறார். அது மட்டும் இல்லாமல் சரவணன் என் பேச்சைக் கேட்டு பல விஷயங்களை இழந்து எனக்காக எல்லா இடத்திலும் நின்று இருக்கிறார். அதனால் சரவணன் ஆசைப்பட்டபடி எல்லாத்தையும் நான் நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி செந்தில் மற்றும் கதிரை உதாசீனப்படுத்தும் அளவிற்கு ஒதுக்கி விட்டார்.

ஆனாலும் இதையெல்லாம் கண்டு கொள்ளாத மீனா என் புகுந்த வீடு மாதிரி எனக்கு சொர்க்கம் வேறு எங்கும் இல்லை. இதுதான் என்னுடைய குடும்பம் சந்தோஷம் எல்லாம் அடங்கி இருக்கிறது என்று ஒரு பொறுப்பான மருமகளாக மீனா நடந்து கொள்கிறார்.

Trending News