ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ராஜி மூலமாக பாண்டியனுக்கு ஏற்படப் போகும் அவமானம்.. நாலா பக்கமும் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் மற்றும் தங்கமயில் பணம் இல்லாமல் ஹோட்டலுக்கு வெளியே நிற்கிறார்கள். அப்பொழுது ஹோட்டலில் இருந்து வந்தவர்கள் இங்கே நிற்க கூடாது. எதுவாக இருந்தாலும் வெளியே தான் நிற்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை கேட்டதும் தங்கமயில் ஓவர் ஆக்டிங் பண்ணி அழுதுகிட்டே வெளியே போகிறார்.

பின்னாடியே தங்கமயிலை சமாதானப்படுத்தும் விதமாக சரவணன் கெஞ்சிகிறார். உடனே தங்கமயில், இதற்கு மேலேயும் இங்கு நின்னு அவமானப்பட முடியாது வாங்க போகலாம் என்று சரவணனை கூப்பிடுகிறார். அதற்குள் கதிர், சரவணனுக்கு ஃபோன் பண்ணி உன் அக்கவுண்ட்ல பணம் அனுப்பி இருக்கேன். செக் பண்ணிட்டு ஹோட்டலுக்குள் போய் சந்தோசமாக இரு என்று சொல்கிறார்.

தங்கமயில் போடும் ட்ராமாவை நம்பிய சரவணன்

இதை கேட்டதும் சரவணன், சந்தோஷத்துடன் தங்கமயிலிடம் சொல்லி ஹோட்டலில் ரூம் புக் பண்ணிட்டு போய் விடுகிறார்கள். அப்பொழுது இவர்களுடைய நிலைமை என்ன ஆச்சு என்று தங்கமயிலுக்கு பாக்கியம் ஃபோன் பண்ணி கேட்கிறார். அப்பொழுது நடந்த விஷயத்தை சொல்லிய தங்கமயில், இதெல்லாம் தேவைதான் அவருக்கு பொண்டாட்டியை கூட்டிட்டு வரும்போது கையில பணம் கொண்டுட்டு வரணும்னு தெரியாதா?

இனிமேலாவது அவருக்கு இது ஒரு பாடமாக இருக்கும். அப்பாவிடம் சம்பளத்தை கொடுக்கும் பொழுது அவருக்கு தேவைப்படும் செலவை எடுத்து வைத்துவிட்டு கொடுக்க சொல்லு என்று தங்கமயிலுக்கு ஐடியா கொடுக்கிறார். இதைக் கேட்டு தங்கமயிலும் தலையை ஆட்டிக்கொண்டு சரவணன் இடம் நடந்த விஷயத்தை மறந்து மூன்று நாள் சந்தோசமாக இருக்கலாம் என்று சொல்கிறார்.

உடனே சரவணனும் பொண்டாட்டி சொன்னது சரிதான் என்று தலையாட்டி தங்கமயில் உடன் மகிழ்ச்சியாக இருக்க ஆரம்பித்து விடுகிறார். இதற்கு இடையில் கதிர் எப்படி அவ்வளவு பணத்தையும் அனுப்பி வைத்தான் என்று பழனிச்சாமி செந்தில் இடம் கேட்கிறார். அதற்கு அப்பா போனிலிருந்து பத்தாயிரம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிக் கொண்டான் என்று சொல்லி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.

இதை கேட்டதும் பழனிச்சாமி, வீட்டில் நிச்சயம் ஒரு பூகம்பம் இருக்கப்போகிறது என்று பயப்பட ஆரம்பித்து விட்டார். இதனால் பாண்டியன், கதிரை வச்சு செய்யும் அளவிற்கு ருத்ரதாண்டவம் ஆடப்போகிறார். இது போதாது என்று இன்னொரு பிரச்சினை ராஜி மூலமாக பாண்டியனுக்கு அவமானம் ஏற்பட போகிறது. அதாவது ராஜியின் அண்ணன் குமரவேலுக்கு பொண்ணு பார்த்திருக்கிறார்கள்.

அந்த வகையில் பொண்ணு வீட்டுக்காரர்கள் ராஜியின் அப்பா வீட்டை பார்ப்பதற்கு வருகிறார்கள். இதனால் பொண்ணு வீட்டுக்காரர்கள் வரும்பொழுது கழுத்தில் நகையில்லாமல் இருந்தால் நல்லா இருக்காது. லாக்கரில் வைத்திருக்கும் நகை அனைத்தையும் எடுத்து கழுத்தில் போட்டுக் கொள் என்று முத்துவேல் சொல்லிவிடுகிறார். ஆனால் நகை அனைத்தையும் ராஜி அம்மா வடிவு, ராஜிக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த ஒரு விஷயம் முத்துவேல் மற்றும் சக்திவேலுக்கு தெரிய வரும் பொழுது வடிவு, நகை அனைத்தையும் ராஜிக்கு கொடுத்து விட்டதாக சொல்லப் போகிறார். இதை கேட்டதும் கோபத்தில் பாண்டியன் வீட்டு முன்னாடி பிரச்சனை பண்ண போகிறார்கள். ஏற்கனவே என் பொண்ணு நகையை எடுத்துட்டு போய் உன் பையன் விற்று விட்டான். அது போதாது என்று என் மனைவி நகையும் வாங்கி வைத்திருக்கிறாயா உனக்கு எல்லாம் வெக்கமா இல்லையா என்று பாண்டியனை அவமானப்படுத்தும் விதமாக மிகப்பெரிய கலவரம் நடக்கப் போகிறது.

இதனால் பாண்டியன் ஒட்டுமொத்த கோபத்தையும் கதிரிடம் காட்டும் விதமாக பிரச்சனை பெருசாக வெடிக்க போகிறது. ஏற்கனவே பணத்தை திருடிய கதிர் மேல் கோபத்தில் இருக்கும் பாண்டியனுக்கு இந்த ஒரு விஷயமும் சேர்த்து ரகளை பண்ணப் போகிறார். ஆக மொத்தத்தில் எந்தத் தவறும் செய்யாத கதிர் அனைத்து பிரச்சினைகளிலும் சிக்கி தவிக்கப் போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடந்த சம்பவங்கள்

Trending News