Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டோடு இருக்கும் மச்சானுக்கு நல்லபடியாக கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று ஆசை ஆசையாக ஒரு பொண்ணு பார்த்தார். அந்த இடமும் கைக்கூடி வரும் நேரத்தில் பழனிவேலுவின் அண்ணன்கள் இரண்டு பேரும் அதைக் கெடுத்து பாண்டியன் முகத்தில் கரியை பூசி விட்டார்கள்.
அதாவது பழனிவேலுக்கு பார்த்த பெண் வீட்டாரிடம் தாறுமாறாக சொல்லி நிச்சயதார்த்தத்தை நடக்க விடாமல் தடுத்து விட்டார்கள். தன் மகனுக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆவலுடன் பார்க்க வந்த கோமதி அம்மாவுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. அதற்கு காரணம் சக்திவேல் மற்றும் முத்துவேல் தான் என்று தெரிந்ததும் வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார்.
ஆனாலும் இதற்கெல்லாம் அசுராமல் சக்திவேல் மற்றும் முத்துவேல் பாண்டியனை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அப்படி பண்ணினோம் என்று உண்மையை ஒத்துக் கொள்கிறார்கள். அதே மாதிரி நிச்சயதார்த்தம் நடக்காமல் போனதால் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் தலைகுனிந்து வீட்டிற்கு வந்து விடுகிறார்கள்.
வந்ததும் கோமதி, அண்ணன்களிடம் நியாயம் கேட்கும் விதமாக சண்டை போடுகிறார். இதற்கு பதில் சொல்லும் அளவிற்கு சக்திவேல் மற்றும் முத்துவேலு பாண்டியனை அவமானப்படுத்தி பேசி விட்டார்கள். இவர்களெல்லாம் திருத்தவே முடியாது என்பதற்கு ஏற்ப பழனிவேலு எதுவும் சொல்லாமல் அப்படியே பரிதவித்துப் போய் நிற்கிறார்.
ஆனால் இவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்றால் மீனா கையில் இருக்கும் அதிகாரத்தால் தான் முடியும். ஏற்கனவே சக்திவேல் மற்றும் முத்துவேல் ஆக்கிரமிப்பு இடங்களை அதிகமாக வாங்கிப் போட்டு வைத்திருக்கிறார். அதற்கு தகுந்த நோட்டீசை மீனா அனுப்பி வைத்திருக்கிறார். இனி இதை வைத்து தான் அவர்களுடைய திமிரை அடக்கப் போகிறார். அத்துடன் ராஜியும் அவருடைய கல்யாண ரகசியத்தை முத்துவேல் கிட்ட சொல்ல வேண்டும்.