இயக்குனர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பாண்டியராஜன். குள்ளமான நடிகர், திருட்டு முழி என பலரும் இவரை கேலி செய்த நிலையில் தன்னாலும் ஹீரோவாக முடியும் என சாதித்து காட்டியவர். இவருடைய இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் பாண்டியராஜன் படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இவருக்கு பல்லவராஜன், பிரிதிவிராஜன், பிரேமராஜன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இதில் பிரிதிவி ராஜன் தனது தந்தையுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் தற்போது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியராஜன் மற்றொரு மகன் சினிமாவில் வேறு விதமாக அறிமுகமாகியுள்ளார்.
அதாவது பாண்டியராஜன் 3வது மகன் பிரேமராஜன் தற்போது சினிமாவில் ட்ரோன் கேமரா எனப்படும் டெக்னாலஜியை பயன்படுத்தி வருகிறார். இதில் அவர் பலே கில்லாடியாம். தற்போது உருவாகும் படங்களில் பெரும்பாலும் ட்ரோன் கேமரா டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இது மிக விலை உயர்ந்த ஒன்றாகும். மற்றவர்கள் இதைப் பயன்படுத்தும்போது எங்கேயாவது துளைத்து விட அதிக வாய்ப்புள்ளதாம். ஆனால் பிரேமராஜன் ட்ரோனை வைத்து செய்யாத வேலைகளே இல்லையாம். அந்த அளவுக்கு இதில் அவ்வளவு வித்தைக்காரராம்.
மேலும் ட்ரோன் எங்கே சென்றாலும் திரும்ப பிரேமராஜன் கைக்கு வந்துவிடுமாம். இதனால் தற்போது எல்லா படங்களுக்கும் பாண்டியராஜன் மகன் பிரேமராஜனை தான் கூப்பிட்டு வருகிறார்களாம். மேலும், அவருக்காக பல இயக்குனர்கள் தற்போது காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.