Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி டியூஷன் எடுத்தது பெரிய பஞ்சாயத்து ஆக முடிந்துவிட்டது. அந்த வகையில் பாண்டியனை அவமானப்படுத்தும் விதமாக சக்திவேல் மற்றும் முத்துவேல் காயப்படுத்தி விட்டார்கள். அத்துடன் நகையும் கேட்டு பிரச்சினை பண்ணியதால் பாண்டியன் லாக்கரில் இருக்கும் ராஜி அம்மா நகையை திருப்பி கொடுத்து விட சொல்கிறார்.
அதன்படி கோமதி, ராஜி மற்றும் தங்கமயிலை கூட்டிட்டு வங்கிக்கு போகிறார். இதற்கிடையில் தங்கமயில், பாக்கியத்திற்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லுகிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று பாக்கியம் நீயும் உன் அத்தையுடன் வங்கிக்கு போ. அங்க போய் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உன் நகையும் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துரு. ஏனென்றால் ரொம்ப நாள் அங்கு இருந்தால் நம் மாட்டிக் கொள்வோம் என்று சொல்கிறார்.
மச்சான்கள் மூலம் பாண்டியனுக்கு தெரியவரும் உண்மை
அதனால் தங்கமயில், கோமதி உடன் சென்று லாக்கரில் இருக்கும் அவருடைய நகையும் எடுத்துட்டு வருகிறார். வந்தவுடன் வீட்டில் வைத்து ராஜியின் அம்மா நகை எதெல்லாம் என்று ராஜிடம் கொடுத்து கேட்கிறார். ராஜி ஒவ்வொரு நகையாக பார்க்கிறார். அப்பொழுது தங்கமயிலும் அவருடைய நகை எடுத்துப் பார்க்கிறார். ஆனால் பார்க்கும் பொழுது அவருடைய நகை அனைத்தும் கருத்துப் போய் இருக்கிறது.
போலியான நகை என்பதால் தங்கமயில் நகை அனைத்தும் கருத்துப் போய்விட்டது. இதனால் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் தங்கமயில் முகத்தில் தெரிந்து விட்டது. அந்த நேரத்தில் அரசி, உங்க நகை நன்றாக இருக்கிறது நான் ஒரு முறை போட்டு பார்க்கலாமா என்று கேட்கிறார். இதனால் பதட்டமான தங்கமயில் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருக்கும் பொழுது பொண்டாட்டியிடம் இருந்து தகரமயிலை காப்பாற்றுவதற்காக பாண்டியன் வந்துவிடுவார்.
உனக்கு நிறைய நகை இருக்கும்பொழுது நீ ஏன் அண்ணிடம் கேட்கிறாய் என்று சொல்லி விடுகிறார். இதனால் கோமதி இடம் இருந்து தங்கமயில் தப்பித்துக் கொள்கிறார். ஆனால் இதற்கு எதிர்மாறாக கருத்துப்போன நகையை குடும்பத்திடம் இருந்து மறைக்கும் விதமாக ராஜி நகைக்குள் போட்டு விடுகிறார். இது தெரியாத்தனமாக பாண்டியன் மச்சான்களிடம் போய் மாட்டிக் கொள்கிறது.
பிறகு அவர்கள் மூலம்தான் இது அனைத்தும் போலி நகை என்று தெரிந்து பாண்டியன் அசிங்கப்பட்டு நிற்கப் போகிறார். அப்பொழுதுதான் தங்கமயில் குடும்பம் ஏமாற்றி இருக்கிறார்கள் என்று பாண்டியனுக்கு புரிய போகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- மீனா ராஜியை புரிந்து கொள்ளாமல் அராஜகம் பண்ணும் பாண்டியன் குடும்பம்
- ராஜியால் மோசமான வில்லனாக மாறிய முத்துவேல்
- பாண்டியன் மருமகள் போட்ட பிளானை சுக்கு நூறாக உடைத்த செந்தில்