Vijay Tv Serial: சின்னத்திரை சீரியல்களைப் பொறுத்தவரை சன் டிவிக்கு அடுத்தப்படியாக விஜய் டிவி சேனல் தான் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் ரியாலிட்டி ஷோ, காமெடி மற்றும் புதுவிதமான நிகழ்ச்சிகள் வந்தாலும் சீரியல்கள் மூலம் மக்களை கவர்ந்ததால் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங் இல் இடம் பிடித்து வருகிறது.
அதிலும் கடந்த நான்கு வருடமாக பாக்கியலட்சுமி சீரியலை வைத்து அரைத்து மாவை அரைத்து வருகிறது. இருந்தாலும் இந்த நாடகத்திற்கு இருக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதால் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் விட்ட இடத்தை பிடித்து வருகிறது.
டிஆர்பிக்காக பழைய யுக்தியை கையில் எடுத்த விஜய் டிவி
அதுவும் தாத்தா இறப்பை வைத்து செண்டிமெண்டாக தாக்கி பார்ப்பவர்களை திசை திருப்ப வைத்துவிட்டது. இதே மாதிரி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் அப்பா மகன் உறவு எப்படி இருக்க வேண்டும். ஒற்றுமையான குடும்பம் இருக்க வேண்டும் என்றால் எந்த மாதிரியான சகிப்புத்தன்மை இருக்க வேண்டும் என்பதை காட்டும் விதமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கதை நகர்ந்து கொண்டு வருகிறது.
அதனால் இந்த ஒரு சீரியலும் மக்களின் ஃபேவரிட் சீரியலாக இடம் பிடித்து விட்டது. ஆனால் இந்த இரண்டு சீரியல்களிலும் முக்கிய கதைகள் எதுவும் இல்லாமல் அரைத்து மாவையே அரைக்கும் அளவிற்கு தான் கதை ஓடிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த ரெண்டு நாடகத்தையும் இணைக்கும் விதமாக பாண்டியன் பாக்கியா நாடகத்தை சேர்த்து மகா சங்கமமாக மறுபடியும் கொண்டுவர முடிவு பண்ணி இருக்கிறார்கள்.
அந்த வகையில் பாண்டியனின் ஐம்பதாவது பிறந்த நாள் நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக பண்ண வேண்டும் என்று நினைக்கும் மருமகள்கள் எடுக்கப் போகும் முடிவால் பாக்கியா குடும்பம் இதில் சங்கமமாக சேரப் போகிறது.
விஜய் டிவி சீரியலை பொறுத்தவரை கதை கொஞ்சம் டல் அடிக்கிற மாதிரி இருந்தால் உடனே அந்த நாடகத்துடன் பக்கத்தில் இருக்கும் நாடகத்தை சேர்த்து வைத்து மகா சங்கமாக ஒரு திருப்பத்தை கொண்டு வந்து விடலாம் என்று முடிவு பண்ணி அரங்கேற்றுவார்கள். அந்த மாதிரி வரப்போகிற வாரத்தில் பாண்டியன் மற்றும் பாக்யா மகா சங்கமத்தில் இணைய போகிறது.
- Vijay tv 5 Serial: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் விஜய் டிவியின் 5 சீரியலின் கதை
- பாக்கியலட்சுமிக்கு முன் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் முக்கியமான சீரியல்
- கோமதியை டம்மியாக்கி விஜயாவை தூக்கி நிறுத்திய விஜய் டிவி