புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொண்டாட்டியை ஒதுக்கி மருமகளுக்கு ஜால்ரா போடும் பாண்டியன்.. அப்பாவிடம் முட்டி மோத போகும் சரவணன்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், கதிரை அடித்ததால் கோமதி கோபத்தில் இருக்கிறார். அந்த வகையில் கோபத்தை வெளிக்காட்டும் விதமாக அனைவரும் சாப்பிட உட்கார்ந்திருக்க பொழுது பாண்டியனுக்கு கோபத்துடன் பரிமாறுகிறார். இதை பார்த்த பாண்டியன், கோமதி கோபமாக இருக்கிறார் என்று தெரிந்தும் பெருசாக கண்டு கொள்ளவில்லை.

தன் கணவர் நம் மீது இவ்வுளோதான் அக்கறையாக இருக்கிறார் என்று கோமதி வழக்கம் போல் மீனா மற்றும் ராஜிடம் புலம்பி கொள்கிறார். அந்த நேரத்தில் வந்த தங்கமயில், ராஜியிடம் மாமா கதிரை அடித்தது உனக்கு கோபமாக இல்லையா? அதுவும் எல்லாரும் இருக்கும் பொழுது அனைவரும் முன்னிலையில் அடித்து விட்டார் உனக்கு கஷ்டமாக இல்லையா? இதைப் பற்றி ஏன் நீ மாமாவிடம் பேசாமல் இருக்கிறாய் என்று கேட்கிறார்.

மருமகளுக்காக ஓகே சொன்ன பாண்டியன்

அதற்கு ராஜி, அவங்க அப்பா பையனுக்கு உள்ள விஷயம், இப்ப அடிச்சுப்பாங்க அப்புறமா கூடி இருப்பாங்க, இதுல நான் ஏன் தலையிடனும். அது மட்டுமல்லாமல் மாமா, கதிர் மேல் இருக்கும் பாசத்தை தான் வெளி காட்டினார். ஆனால் அதை கோபமாக காட்டிவிட்டார் அவ்வளவுதான். பிறகு கோபம் தீர்ந்ததும் அவரே பழைய மாதிரி சகஜமாக ஆகிவிடுவார். இதில் தேவையில்லாமல் நாள் பேசினால் மட்டும்தான் பிரச்சனை பெருசாகும் என்று ராஜி, தங்கமயில் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வாயை அடைத்துவிட்டார்.

அதன் பின் மொட்டை மாடியில் அண்ணன் தம்பிகள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கதிர் அவருடைய புது பிசினஸை தொடங்கி அதன் மூலம் அப்பாவுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கப் போகிறேன். இன்னும் கூடிய விரைவில் இந்த குன்னக்குடியை விலைக்கு வாங்கி எல்லாத்துக்கும் ஒரு மாளிகையை கட்டிக் கொடுக்கும் கனவு போல் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.

அங்கே வந்த மீனா மற்றும் ராஜியிடம் அதே மாதிரி கனவை பற்றி சொல்லி அனைவரும் மகிழ்ச்சியாக பேசிக் கொள்கிறார்கள். அப்படியே நாங்கள் இங்கே தூங்கக் கொள்கிறோம் நீங்கள் ரூமுக்கு போங்க என்று மீனா மற்றும் ராஜியை அனுப்பி வைத்து விட்டார்கள். அப்பொழுது சரவணனின் முன்னாள் காதலிக்கு அனுப்பின மெசேஜ் பற்றி செந்தில் மற்றும் கதிர் கிண்டல் அடித்து பேசுகிறார்கள்.

அந்த நேரத்தில் வந்து தங்கமயிலை பார்த்ததும் கதிர் உஷாராகி வேறு பேச்சை பேச ஆரம்பித்து விட்டார். பிறகு சரவணனை தூங்க கூப்பிட்ட நிலையில் நீ போய் தூங்கு நான் அப்புறமாக வருகிறேன் என்று சரவணன் சொல்கிறார். ஆனால் கீழே போய் காத்துக் கொண்டிருக்கும் தங்கமயில், சரவணன் வர வில்லை என்பதால் கோபத்துடன் தூங்கி விடுகிறார். இதற்கெல்லாம் சேர்த்து வைத்து மறுநாள் சரவணனுக்கு மிகப் பெரிய ஆப்பு வைக்க தயாராகி விட்டார்.

அந்த வகையில் சரவணனிடம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி எப்படியாவது நாம் இருவரும் ஹனிமூனுக்கு போக வேண்டும். அப்படி என்னை கூட்டிட்டு போனால் தான் உங்களுக்கு என் மேல் அன்பு அக்கறை இருக்கிறது என்று அர்த்தம் என சொல்லிவிட்டார். வேறு வழி தெரியாத சரவணன் சரி நாம் இருவரும் போகலாம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து பாண்டியனிடம் இந்த ஒரு விஷயத்தை எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் சரவணன் முழிக்க போகிறார். அந்த வகையில் தங்கமயில் கொடுக்கும் டார்ச்சரால் வேறு வழி இல்லாமல் பாண்டியனிடம் முட்டி மோதி சம்மதத்தை வாங்க வேண்டும் என்ற நிலைமைக்கு வந்து விடுவார். பாண்டியனும், தங்கமயில் என்ன கேட்டாலும் சரி என்பதற்கு ஏற்ப சம்மதத்தை கொடுத்து விடுவார். ஆனால் தங்கமயிலின் உண்மையான சுயரூபம் தெரிய வரும்போது பாண்டியனுக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News