வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

டபுள் கேம் ஆடும் பாண்டியன்.. செந்திலை அரசாங்க உத்தியோகத்தில் அமர வைக்க போராடும் மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பொதுவாக கரராக இருக்கும் அப்பாக்கள் அனைவரும் பசங்களிடம் அன்பை வெளிப்படையாக காட்ட மாட்டார்கள். ஆனால் அதற்கு பதிலாக அவர்கள் இல்லாத நேரத்தில் தெரிந்தவர்களிடம் பெருமையாக பேசுவதை வழக்கமாக வைத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த பாசத்தை பெற்ற பிள்ளையிடம் காட்டினால் பெத்த பிள்ளைகளும் சந்தோஷப்படும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

அப்படித்தான் பாண்டியனும், வீட்டுக்குள் வைத்து பிள்ளைகளை மட்டம் தட்டி பேசிவிட்டு வெளியில் என் பிள்ளைகள் போல வருமா என்பதற்கு ஏற்ப பெருமையாக பேசி வருகிறார். அதாவது செந்தில், மீனாவின் அப்பாவிடம் போட்ட சவாலில் ஜெயிக்க வேண்டும். அரசாங்க உத்தியோகத்தில் வேலை பார்க்க வேண்டும் என்று மீனா, செந்திலை ஊக்கப்படுத்தி படிக்க சொல்லி பரிட்சைக்கு தயாராக வைத்திருக்கிறார்.

அப்படி செந்தில் பரிட்சைக்கு போகும்பொழுது பாண்டியன் மற்றும் கோமதி காலில் விழுந்த ஆசிர்வாதம் வாங்கினார். கோமதி ஆசீர்வாதம் பண்ணி நல்லா எக்ஸாம் எழுது என்று சொல்கிறார். ஆனால் பாண்டியன் நல்லா படிச்சு உன் மண்டைக்குள் ஏதாவது இருந்தா மட்டும்தான் பரீட்சைல பாஸ் பண்ண முடியும். அதை ஞாபகம் வச்சுக்கோ என்று செந்திலை கஷ்டப்படுத்தும் படி பேசி விட்டார்.

இதனை பார்த்து கோபம் அடைந்த மீனா, பரிட்சைக்கு நேரமாகிவிட்டது என்று சொல்லி அங்கிருந்து செந்திலை கூட்டிட்டு போய் விட்டார். பிறகு எக்ஸாம் எழுதுவதற்கு செந்தில் தயாராகி விட்டார். செந்தில் எக்ஸாம் எழுதி வரும் வரை வெளியில் இருந்து மீனா காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 1 சீரியலில் கதிர் எக்ஸாம் எழுதுவதையும் முல்லை படிக்க சொன்னதையும் ஞாபகப்படுத்துகிறது.

அடுத்ததாக பாண்டியன் மற்றும் பழனிச்சாமி வெளியே போய்க்கொண்டிருக்கும் பொழுது அங்கு மீனாவின் அப்பாவை பார்த்ததும் என் மகன் செந்தில் அரசாங்க வேலை பார்க்கவில்லை என்று தானே உங்களுக்கு பிரச்சினையாச்சு. அதனால தானே என் மகனையும் மீனாவையும் ஒதுக்கி வச்சீங்க. இன்னைக்கு என் மகன் அரசாங்க உத்தியோகத்தில் சேர பரிட்சை எழுத போயிருக்கிறான்.

அதனால என் பையனுக்கு நிச்சயம் அரசாங்க வேலை கிடைத்துவிடும். அப்பொழுது நீங்க நிச்சயம் என் மகன் மற்றும் மீனாவிடம் பேசுவீங்க என்று சவால் விடும் அளவிற்கு பெருமையாக பேசிவிட்டார். இதைப் பார்த்த பழனிசாமி, இது என்னடா மாமா வீட்டுக்குள்ள ஒன்னும் வெளிய ஒன்னும் வேற மாதிரி பேசிக்கொண்டு டபுள் கேம் ஆடுறாரு என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். பாண்டியனும் அப்படி தான் நடந்து கொள்கிறார்.

ஆனால் யாருக்காக இல்லையோ, மீனாவின் ஆசையும் செந்தில், மாமனாரிடம் விட்ட சவாலுக்காகவும் ஜெயித்து காட்ட வேண்டும்.

Trending News