Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் பிரபலமாகுதோ இல்லையோ, அதில் ஆர்டிஸ்ட்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று விடுவார்கள். அதன்படி அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று நிலையான ஒரு கேரியரை தக்க வைத்துக் கொள்வார்கள். அதே மாதிரி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக வெற்றி அடைந்ததை ஒட்டி இரண்டாம் பாகம் தொடங்கி இருக்கிறது.
ஆரம்பத்தில் இது எதற்கு தேவையில்லாத ஒரு கதை என்று சொல்லிய மக்கள் தற்போது சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு இரண்டாம் பாகம் மக்களிடம் இடம் பிடித்து விட்டது. அதிலும் மீனா, ராஜி, கோமதி மற்றும் கதிர் கூட்டணி பார்க்கவே சுவாரசியமாக இருக்கிறது என்று மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இப்படி இருக்கும் சமயத்தில் புதிதாக நுழைந்த தங்கமயிலின் கேரக்டர் பலருக்கும் எரிச்சலை உண்டாக்கி விட்டது.
சிகிச்சை பெற்று வரும் தங்கமயில்
பாண்டியன் மூத்த மருமகளாக நுழைந்திருக்கும் தங்கமயில் என்கிற சரண்யா துராடி ஓவர் ஆக்டிங் பண்ணும் அளவிற்கு நடிப்பு கடுப்பேற்றுகிறது. அதிலும் பாண்டியன் இவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. முக்கியமாக வாக்கப்பட்ட குடும்பத்தை ஏமாற்றும் வகையில் புகுந்த வீட்டில் இருக்கும் மொத்த பேரும் சேர்ந்து ஏமாற்றி தங்கமயிலை கட்டி வைத்தார்கள்.
இது எதுவும் தெரியாமல் பாண்டியன் நான் பார்த்த மருமகள் தான் பெருசு என்று தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார். அதனாலேயே தங்கமயில் கேரக்டர் பலரும் வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். தற்போது தொடர்ந்து தங்கமயில் கேரக்டரில் சரண்யா நடிப்பாரா என்பது ஒரு கேள்விக்குறியாகி நிற்கிறது. ஏனென்றால் சரண்யாவை பொறுத்தவரை செய்தி வாசிப்பாளராக சினிமாவிற்குள் நுழைந்தார்.
அதன் பின் நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று முதன் முதலில் விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பின் பாதிலேயே அந்த நாடகத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டார். அடுத்து சன் டிவியில் ரன் என்ற நாடகத்தில் நடித்தார் அதே மாதிரி மறுபடியும் ஆயுத எழுத்து என்ற நாடகத்திலும் நடித்தார்.
இப்படி மூன்று நாடகத்திலும் நடித்தும் தொடர்ந்து இவரால் நடிப்பு கொடுக்க முடியாமல் பாதியிலேயே விலகும் அளவிற்கு இவருடன் நிலைமை ஆகிவிட்டது. அதையெல்லாம் தாண்டி கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்குப் பின் மறுபடியும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிப்பதற்கு நுழைந்தார். ஆனால் அதற்குள் இவருடைய காலில் ஏற்பட்ட காயத்தினால் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் சரண்யா காலில் கட்டு போட்டு இருக்கிறது. எப்படியும் இது கொஞ்சம் குணமாகும் வரை இனி தங்கமயில் கேரக்டர் காட்டப்பட வாய்ப்பு இல்லை. ஒருவேளை கதைப்படி இவருடைய கேரக்டர் வேண்டுமென்றால் சரண்யாவிற்கு பதில் வேற ஒரு நடிகையை போடவும் வாய்ப்பு இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்
- பாண்டியனுக்கு வரும் பிரச்சனை, ஐடியா கொடுத்த சம்மந்தி
- பொண்டாட்டி விட மருமகளுக்கு ஜால்ரா போடும் பாண்டியன்
- தங்கமயிலிடம் சரண்டர் ஆன பாண்டியன்