புதன்கிழமை, ஜனவரி 22, 2025

சன்னியாசியை தலையில் அடித்து சம்சாரியாக மாற்றிய பாண்டியன்.. கேள்விக்குறியாக இருக்கும் மகனின்கல்யாணம்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பாண்டியனின் மூத்த மகன் கல்யாணம் பண்ணாமல் மற்ற இரண்டு மகன்கள் கல்யாணம் பண்ணி குடும்பமாக இருக்கிறார். இதனால் மனவேதனையில் மூத்த மகனை நினைத்து பாண்டியன் ரொம்பவே வேதனைப்பட்டு வருகிறார்.

இவருடன் சேர்ந்து ஒட்டுமொத்த குடும்பமும் சரவணனை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார்கள். இதனால் சரவணன் கல்யாணமே வேண்டாம் கட்ட பிரம்மச்சாரி ஆகவே இருந்து கொள்கிறேன் என்று சன்னியாசி மாதிரி மாறிவிட்டார்.

மேலும் சன்னியாசி மாதிரி வீட்டிற்கு வந்து அனைவருக்கும் அருள்வாக்கு சொல்லி ஓவராக டிராமா பண்ணி வந்தார். இதனைப் பார்த்து அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். அத்துடன் தன் மகன் இந்த நிலைமைக்கு போய்விட்டானே என்று கோமதிக்கு மயக்கமே வந்துவிட்டது.

பாண்டியன் பண்ணிய அக்கப்போர்

பிறகு ஒரு வழியாக எல்லோரும் சேர்ந்து சரவணனின் இந்த மாற்றத்திற்கு கவலைப்பட்டு வந்த நிலையில் திடீரென்று யாருமே எதிர்பார்க்காத மாதிரி பாண்டியன் சரவணனின் தலையில் அடித்துக் சன்னியாசியாக வந்த மகனை சம்சாரியாக மாற்றிவிட்டார்.

அதாவது சரவணன் குடும்பத்தில் இருப்பவர்கள் கவலைப்பட்டு வருவதால் அவர்களின் மனநிலை மாற்றுவதற்காக இந்த மாதிரி வேஷம் போட்டு வந்திருக்கிறார் என்று பாண்டியன் புரிந்து கொண்டார். அத்துடன் இந்த மாதிரி கோமாளித்தனமான வேலை எல்லாம் இனி பார்க்க கூடாது.

நீயாவது நான் சொல்கிறபடி இருப்பாய் என்று நினைத்தேன். ஆனா நீயும் உன் இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறதா இருந்தால் நான் எதற்கு இங்கே இருக்கிறேன் என்று ஆதங்கமாக பேச ஆரம்பித்து விட்டார். உடனே சரவணன் என்னை மன்னித்து விடுங்கள்.

நான் இனிமேல் இந்த மாதிரி விஷயங்களை பண்ண மாட்டேன் என்று சொல்லிவிட்டார். பிறகு செந்தில் மேட்ரிமோனியில் கல்யாணத்திற்காக பதிந்து வைத்திருக்கிறார். அதில் ஒரு பெண் ஓகே சொல்லி சரவணனை தனியாக பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

இதை கேள்விப்பட்ட பாண்டியன் ஒன்னும் பிரச்சனையில்லை எல்லோரும் குடும்பத்துடன் போகலாம் என்று அனைவரும் கிளம்பி போய் விட்டார்கள். பிறகு சரவணன் அந்த பெண்ணை பார்த்து பேசும் பொழுது குடும்பத்துடன் வந்திருப்பது தெரிந்து விடுகிறது.

அதற்கு அந்த பெண், தனியாக பேச வேண்டும் தான் உங்களை மட்டும் வர சொன்னேன். நீங்கள் இப்படி குடும்பத்துடன் கூட்டிட்டு வந்து என்னை இன்சல்ட் பண்ணி விட்டீர்கள். இதன் பிறகும் நமக்கு எதுவுமே செட்டாகாது என்று சரவணன் டீலில் விட்டு டாட்டா காட்டி விட்டுப் போய்விட்டார்.

Trending News