சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

மச்சான்களை சீண்டிப்பார்க்கும் பாண்டியன்.. கல்யாணத்தை நிறுத்த போகும் சக்திவேல், அரசிக்கு நடக்க போகும் கல்யாணம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுக்கு பொண்ணு பார்த்த விஷயத்தை சக்திவேல் மற்றும் முத்துவேலுவிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக வாசலில் நின்று பாண்டியன் கூவுகிறார். அதாவது என்னுடைய மச்சானுக்கு நான் பொண்ணு பார்த்து விட்டேன். இன்னைக்கு சாயங்காலம் எல்லோரும் பொண்ணு பார்க்கப் போகிறோம் என்று கோமதி அண்ணன்கள் காது பட கத்தி சொல்லிவிட்டார்.

இதை கேட்டதும் சக்திவேல் மற்றும் முத்துவேலு, அவன் யாரு நம்ம தம்பிக்கு பொண்ணு பார்ப்பதற்கு. நாம் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க மாட்டோமா என்று சொல்லி பழனிவேலுவை வீட்டிற்கு வர வைக்கிறார்கள். பழனிவேலு வீட்டுக்கு வந்ததும் நீ அந்த பாண்டியன் வீட்டுக் கடையில் எடுபிடி வேலை பார்க்கிறாய்.

இப்பொழுது அவங்க பார்த்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் பொண்டாட்டியையும் அந்த வீட்டில் எடுபிடி வேலை பார்க்க வைக்க போறியா? இல்லையென்றால் எங்க பேச்சை கேட்டுக் கொண்டு எங்களுடன் இந்த வீட்டிற்கு வந்தால் எங்க சொத்திலும் பங்கு உண்டு. நாங்களும் நல்ல பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம் என்று முத்துவேலு மற்றும் சக்திவேல் இருவரும் சேர்ந்து பழனிவேலுவிடம் ஆசை வார்த்தை காட்டி பேசுகிறார்கள்.

ஆனால் எதற்கும் அசராத பழனிவேலு, நான் என்னுடைய அம்மாவிடம் பேசிய நாட்களை விட என் அக்காவிடம் பேசி வளர்ந்த நாட்கள் தான் அதிகம். எந்த காரணத்தை கொண்டும் அவங்களை விட்டு நான் வரமாட்டேன். நல்லதோ கெட்டதோ நான் அங்கேயே இருந்து கொள்கிறேன் எனக்கு எந்த சொத்தும் வேண்டாம் யாருடைய பங்கும் வேண்டாம் என்று சென்டிமெண்டாக பேசிவிட்டு பழனிவேலு வீட்டிற்கு போய்விடுகிறார்.

போனதும் கோமதி இடம் நடந்த விஷயத்தை சொல்லி ரொம்பவே பழனிவேல் பீல் பண்ண ஆரம்பித்து விட்டார். பிறகு மீனா ராஜி செந்தில் மற்றும் கதிர் அனைவரும் சேர்ந்து பழனிவேலுவை சமாதானப்படுத்தி விட்டார்கள். இதனை தொடர்ந்து பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பழனிவேலுக்கு பொண்ணு பார்க்க போய்விட்டார்கள்.

அங்கே பழனிவேலு பற்றி பெருமையாக பாண்டியன் பேசிய நிலையில் பெண் குடும்பத்தில் இருப்பவர்கள் பழனிவேலுவை பிடித்து விட்டது என்று சம்மதம் தெரிவித்து விட்டார்கள். அதே மாதிரி பழனிவேலுக்கு பெண் பிடித்து விட்டது. இதெல்லாம் முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய பாண்டியன், மறுபடியும் மச்சான்களுக்கு தெரியும்படி பழனிவேலுக்கு பெண் பார்த்தாச்சு.

இனி அடுத்தடுத்து நிச்சயதார்த்தம் கல்யாணம் என எங்கள் குடும்பம் கலகட்ட போகிறது. அத்துடன் அண்ணன் என்கிற முறையில் நீங்களும் நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாணத்திற்கு வரலாம். ஆனால் முடிவெடுக்கும் உரிமை எனக்கு மட்டும்தான் என்று சொல்லிய நிலையில் சக்திவேல் கடுப்பாகி விட்டார்.

அத்துடன் பாண்டியன் மீது இருக்கும் கோபத்தினால் பழனிச்சாமிக்கு கல்யாணத்தை நடத்த விடாமல் தடுக்க வேண்டும் என்று சக்திவேல் பிளான் பண்ணப் போகிறார். அந்த வகையில் பழனிவேலுவின் கல்யாணம் கடைசி நேரத்தில் நிற்கும் தருவாயில் பாண்டியன் அவருடைய மகள் அரசியை கட்டி வைத்து விடுவார்.

Trending News