சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

உண்மை உளறிய பாண்டியன், உச்சகட்ட கோபத்தில் பழனிவேலு.. அடக்கி வாசிக்கும் குமரவேலு, ஆரம்பித்த பிரச்சினை

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலு அண்ணன்கள் சதி தெரியாமல் சுகன்யாவை கல்யாணம் பண்ணி அண்ணன் வீட்டுக்கு வந்து விட்டார். அத்துடன் இனி நீ பொட்டலம் மடிப்பதற்கு கடைக்கு போகக்கூடாது. ஒழுங்கு மரியாதையாக குடோனுக்கு வந்து முதலாளியாக இரு என்று பழனிவேலுவிடம் சக்திவேல் சொல்லிவிட்டார்.

ஆனாலும் பழனிவேலு, பாண்டியன் அவமானப்பட்டதை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார். உடனே செந்திலுக்கு போன் பண்ணி மச்சான் ரொம்ப கோபமாக இருக்கிறாரா எப்படி இருக்கிறார் என்று கேட்கிறார். அப்பொழுது சரவணன் எந்த உண்மையையும் சொல்ல வேண்டாம் என்று தடுத்த நிலையில் செந்தில் மற்றும் கதிர் எதுவும் சொல்லாமல் பிரச்சனையே இல்லை என்பது போல் பேசி பழனிவேலுவை சமாளித்து விடுகிறார்கள்.

அடுத்ததாக பழனிவேல் இடம் சுகன்யா பேசுகிறார். ஆனால் பழனிவேலு எதுவும் பேச முடியாமல் தூக்கம் வருகிறது என்று சொல்லி தூங்க போய் விடுகிறார். இருந்தாலும் இந்த சுகன்யாவின் செய்கைகள் அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. எப்படிப்பட்ட கேரக்டர் என்பதை யூகிக்க முடியாத அளவிற்கு தான் மர்மமாக இருக்கிறது. இதுவரை சக்திவேல் மற்றும் முத்துவேல் என்னதான் பாண்டியனுக்கு எதிரியாக இருந்தாலும் குடும்பத்தை பாதிக்காத அளவுக்கு இருந்தார்கள்.

ஆனால் தற்போது இந்த சுகன்யாவை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்த குடும்பமும் சுக்கு நூறாக உடைய போவது போல் தெரிகிறது. அடுத்ததாக சக்திவேல் முத்துவேல் மற்றும் பழனிவேல் அனைவரும் ரைஸ் மில்லுக்கு போய் விட்டார்கள். அங்கே குமரவேலு வந்த நிலையில் பழனிவேலுவை கூப்பிட்டு போய் எல்லா இடத்தையும் காட்டி அனைவருக்கும் இவன்தான் சின்ன முதலாளி என்பதை சொல்லிட்டு வா என அனுப்பி வைக்கிறார்.

அப்படி போகும் பொழுது பாண்டியன் உச்சகட்ட கோபத்தில் ரைஸ் மில்க்குள் நுழைகிறார். அங்கே பழனிவேலு என்னாச்சு மச்சான் என்று கேட்ட நிலையில் நீ உள்ளே போ என்று சொல்லி சக்திவேல் மற்றும் முத்துவேல் இடம் சண்டை போடுகிறார். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கூட பிறந்த தம்பியை பற்றி இவ்வளவு தவறாக பேசி இருக்கீங்க.

நீங்க எல்லாம் மனுச ஜென்மங்களா என்று திட்ட ஆரம்பித்த நிலையில் பொண்ணு வீட்டிற்கு சென்று பழனிவேலுக்கு குழந்தை பிறக்காது என்று சொல்லிட்டு வந்திருக்கீங்க. இதெல்லாம் உங்களுக்கு தப்பா தெரியலையா என்று கேட்ட நிலையில் உள்ளே இருந்து கொண்டு பழனிவேலு பாண்டியன் பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டார். அப்பொழுது பாண்டியனுக்கும் மச்சான்களுக்கும் கைகலப்பு ஆன நிலையில் செந்தில் சரவணன் மற்றும் கதிரும் வந்து விடுகிறார்கள்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து உண்மையை உளறிய நிலையில் உச்சகட்ட கோபத்தில் பழனிவேலு வெளியே வந்து அண்ணன்களை திட்டிவிட்டு இவங்க கூட எல்லாம் இருக்கவே எனக்கு பயமாக இருக்கிறது. இவங்களோட கௌரவத்துக்காக என்ன கொலை பண்ணாலும் பண்ணிடுவாங்க என்று ரொம்பவே வருத்தத்துடன் செந்தில் மற்றும் கதிரிடம் பேசுகிறார். அதற்கு செந்தில் மற்றும் கதிர் அப்படி எல்லாம் நாங்கள் சும்மா விட மாட்டோம். நீங்க எதை நினைத்தும் பீல் பண்ணாதீங்க என்று சமாளிக்கிறார்.

இதற்கிடையில் குமரவேலு, அப்பாவுக்கு சப்போர்ட்டும் பண்ண முடியாமல் பாண்டியனை எதிர்க்கவும் முடியாமல் கொஞ்சம் அடங்கி போய் நிற்கிறார். ஏனென்றால் குமரவேலு ஏதாவது பேசி பிரச்சனை இழுத்து விட்டால் அது அரசிக்கு தெரிந்து விடும். பிறகு அரசி நம்ம பக்கம் திரும்ப மாட்டார் என்பதற்காக குமரவேலு கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்த கட்ட பிரளயமாக குமரவேலு மற்றும் அரிசியின் காதல் ட்ராக் ஆரம்பமாகப் போகிறது. இதன் மூலம் பாண்டியன் மொத்தமாக உடைந்து போய்விடுவார்.

Trending News