வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கதிரை அடிமையாக்க நினைத்த பாண்டியன்.. உண்மையை சொல்ல தயாரான கோமதி, போட்டுக் கொடுக்கும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி டியூஷன் எடுக்கப் போகிறார் அதற்கு மீனா உதவினார் என்று தங்கமயில் மூலம் பாண்டியனுக்கு உண்மை தெரிந்து விட்டது. அதனால் வீட்டிற்கு வந்த பாண்டியன் வழக்கு போல ருத்ரதாண்டவம் ஆடி மீனாவை திட்டி விட்டார். இதனால் கோபப்பட்ட செந்தில், மீனாவிற்காக அப்பாவிடம் நியாயம் கேட்டார்.

மீனா மீது எந்த தவறும் இல்லை, எதற்கெடுத்தாலும் மீனாவை திட்டுவதை நிப்பாட்டி விடுங்கள் என்று சொன்னார். இதற்கு இடையில் கோமதியும், பாண்டியனிடம் நீங்கள் பண்றது ரொம்ப தப்பு. எல்லாரும் முன்னாடியும் இந்த மாதிரி கோபப்பட்டு பேசக்கூடாது என்று சொல்லிய நிலையில் அனைத்தையும் யோசித்துப் பார்த்த பாண்டியன், நம் மீது தவறு இருக்கு என்று உணர்ந்து விட்டார்.

குடும்பத்தை கெடுக்கும் தங்கமயில்

அதனால் வீட்டிற்கு வரும் பொழுது பண்டங்கள் வாங்கிட்டு வந்து சின்ன குழந்தைகளை சமாதானப்படுத்துவது போல மீனா மற்றும் ராஜியை சமாதானப்படுத்தி விட்டார். அப்பொழுது பாண்டியன் வாங்கிட்டு வந்த பண்டத்தை மீனா மற்றும் ராஜி சாப்பிட ஆரம்பித்தார்கள். உடனே தங்கமயில் நானும் இங்கு தான் இருக்கிறேன் என்பதற்கு ஏற்ப பாண்டியனுக்கு சிக்னல் கொடுத்தார்.

அதற்கு பாண்டியன் நீயும் சாப்பிடுமா உனக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி மீனாவிடம் பண்டத்தை தங்கமயிலுக்கும் கொடு என்று சொல்கிறார். உடனே மீனா, அக்கா வெளிபண்டங்கள் எதையும் சாப்பிட மாட்டார் என்று சொல்லி தங்கமயிலுக்கு கொடுக்காமல் வீட்டில் இருப்பவர்களுக்கு ஷேர் பண்ணி அனைவரும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த தங்கமயிலுக்கு இதுதான் வேணும், இவரின் கொட்டத்தை அடக்குவதற்கு ராஜி மற்றும் மீனா தான் சரி என்பதற்கு ஏற்ப மீனா தரமாக செய்துவிட்டார். இதற்கிடையில் ராஜி, டியூஷன் எடுக்க நினைத்ததற்கான காரணத்தை பாண்டியனிடம் கூறினார். அதாவது கதிர் இவ்வளவு கஷ்டப்படுவது எனக்கு கஷ்டமாக தெரிகிறது. காலேஜுக்கும் போயிட்டு வேலையும் பார்த்து எனக்கும் சேர்த்து பணம் சம்பாதிப்பது ரொம்பவே அலுப்பாக இருக்கும்.

அதனால் தான் அவருக்கு ஏதாவது நான் சப்போர்ட் பண்ண வேண்டும் என்பதற்காக டியூஷன் எடுக்க நினைத்தேன் என்று பாண்டியனிடம் புலம்பினார். இதை கேட்ட பாண்டியன், இத வச்சு மறுபடியும் ஒரு பிரச்சனையை ஆரம்பித்து விட்டார். அதாவது மறுநாள் காலையில் கதிரிடம், கண்ட இடத்தில் வேலைக்கு போய் கஷ்டப்பட வேண்டாம். காலேஜ் முடிச்சுட்டு கடைக்கு வந்து வேலையை பார்க்க சொல்லி என்று பாண்டியன் அனைவரது முன்னிலையிலும் கோமதி இடம் சொல்கிறார்.

அத்துடன் அவன் படிப்பு செலவையும், ராஜி படிப்பு செலவையும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று பாண்டியன் சொல்கிறார். இதைக் கேட்ட கதிர் அதெல்லாம் முடியாது என்று சொல்ல, உடனே பாண்டியன் ஏண்டா முடியாது, கோமதி ஒழுங்கு மரியாதையா நான் சொல்றத கேட்க சொல்லு என்று சத்தம் இடுகிறார். அதற்கு கதிர் என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்.

உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எப்படி கொடுக்கணும் என்று எனக்கு தெரியும் என்று கதிர் சொல்லிய நிலையில் பாண்டியன், கதிர் கணத்தில் பளார் என்று அறைந்து உனக்கு என்ன திமிர் என்று திட்டி விட்டார். இதை எல்லாம் பார்த்த கோமதி, ராஜி மற்றும் மீனாவிடம் என் பிள்ளை என்னால தான் தினம் தினம் சித்ரவதை அனுபவிக்கிறான்.

அவனுக்கு நான் தான் இந்த கல்யாணத்தை பண்ணி வைத்தேன் என்று அவர் கிட்ட உண்மையை சொல்லப் போகிறேன் என கோமதி புலம்ப ஆரம்பித்து விட்டார். இதை கேட்டு ராஜி மற்றும் மீனாவும் அதிர்ச்சியாய் நிற்கிறார்கள். ஆனால் இவர்கள் இப்படி ரூமுக்குள் இருந்து பேசிக் கொண்டிருப்பதை வெளியில் இருக்கும் தங்கமயில் கேட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

அப்படி தங்கமயில் கேட்டு இருந்தால், கோமதி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பாண்டியனுக்கு நிச்சயம் தெரிந்துவிடும். ஏனென்றால் அந்த சகுனி வேலையை தான் தங்கமயில் பார்த்து வருகிறார். இன்னும் இதெல்லாம் வைத்து என்ன பூகம்பெல்லாம் வெடிக்கப் போகிறதோ?.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News