ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கோமதியிடம் வீட்டு உரிமையை அபகரிக்கும் பாண்டியன் மருமகள்.. தலைகால் புரியாமல் ஆடும் தங்கமயில்

Pandian Stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி கேட்டுக்கொண்டபடி பாண்டியன் மகன்களை ஹனிமூன் அனுப்பி வைப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். ஆனால் இதில் விருப்பமில்லாத மீனா, பாண்டியனிடம் ஆபீசில் லீவு கேட்க முடியாது. ஏனென்றால் எனக்கான லீவு நான் ஏற்கனவே எடுத்து விட்டேன். அதனால் நான் சென்னைக்கு போகவில்லை என்று சொல்கிறார்.

உடனே ராஜியும், நானும் தான் மாமா இப்பதான் கோச்சிங் கிளாஸ் சேர்ந்து இருக்கிறேன். அதனால் சேர்ந்ததும் லீவு போட்டால் நல்லா இருக்காது. அதனால் என்னாலையும் போக முடியாது என்று சொல்கிறார். இதை கேட்ட பாண்டியன், கோமதி இடம் இப்ப புரியுதா, நான் எதற்கு இவங்க விஷயத்துல தலையிட மாட்டேன் என்று. ஏனென்றால் இவர்கள் யாரும் என்னுடைய பேச்சை கேட்க மாட்டார்கள்.

ஓவராக ஆட்டம் போடும் பாண்டியனின் மருமகள்

நான் சொல்லி என்ன கேட்பது என்ற நினைப்பில் வேண்டுமென்றே மறுப்பு தெரிவிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக என்னிடம் சப்போர்ட் பண்ணி சண்டை போட்டாய் என்று கோபமாக திட்டுகிறார். உடனே செந்தில் அதெல்லாம் இல்லை அப்பா இப்பொழுது தானே நாங்கள் சென்னைக்கு போயிட்டு வந்தோம். ஏற்கனவே குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வேற போனோம்.

அதனால் தான் மீனா வேண்டாம் என்று நினைக்கிறாள் என பாண்டியனிடம் சொல்கிறார். உடனே இனிமேல் உங்க விஷயத்துல நான் தலையிடவே மாட்டேன் என்ன வேணாலும் பண்ணிக்கோங்க என்று பாண்டியன் கோபமாக கிளம்பி போய்விடுகிறார். பிறகு கோமதி ரொம்பவே கோபமாக இருக்கிறார். அந்த வகையில் கோமதியை சமாதானப்படுத்த மீனா மற்றும் ராஜி முயற்சி எடுக்கிறார்கள்.

அதற்கு மீனா நான் சென்னைக்கு அவங்களுடன் போவதை விட இங்கே நாம் மூன்று பேரும் சேர்ந்து சந்தோஷமாக இருக்கும் நாளை தான் நான் என்ஜாய் பண்ணுவேன். அதுவும் மயில் அக்கா வந்த பிறகு, நம்மளால நிம்மதியா ஒரு வார்த்தை பேச முடியல ஜாலியா இருக்க முடியல. அதனால அவங்க ஹனிமூன் போய்ட்டா நம்ம இஷ்டப்படி நாம் இருக்கலாம் என்று கோமதியை ஐஸ் வைத்து விட்டார்.

உடனே கோமதி, ராஜியிடம் நீ ஏன் போகவில்லை என்று கேட்கிறார். அதற்கு ராஜியும் எனக்கு என்னமோ தெரியல உங்களை எல்லாம் விட்டுப் போக மனசே வரலை என்று சொல்லிய நிலையில் கோமதி, மீனா, ராஜி மூன்று பேரும் ஒட்டிக் கொண்டார்கள். பிறகு மாடியில் சரவணனை சமாதானப்படுத்தும் விதமாக கதிர் செந்தில், எல்லாரும் சேர்ந்து ஹனிமூன் போனா உனக்கு சந்தோஷமாக இருக்காது.

அதனால் இந்த முறை நீங்க இரண்டு பேரும் மட்டும் தனியாக போயிட்டு வாங்க. நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரு நாள் பிக்னிக் போகலாம் என்று சரவணனை சமாதானப்படுத்தி விட்டார்கள். அடுத்ததாக கோமதி, மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது பழனிச்சாமி வருகிறார். கடை சம்பந்தமாக பணம் தேவைப்படுகிறது என்று கோமதியிடம் கேட்கும் பொழுது தங்கமயில் வந்து நான் எடுத்து தருகிறேன் பீரோல் சாவியை கொடுங்க என்று கேட்கிறார்.

அதற்கு கோமதி நானே போய் எடுத்துக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். உடனே தங்கமயில் நீங்க எங்க இருக்குன்னு மட்டும் சொல்லுங்க நான் எடுக்கிறேன். ஏன் நாங்களும் தெரிந்து வைக்கக் கூடாது என்று வீட்டின் உரிமையை அதிகாரமாக கோமதி இடம் கேட்கிறார். ஆனால் கோமதி இந்த விஷயத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று அவரே போய் பீரோவில் பணத்தை எடுக்கிறார்.

அந்த வகையில் வீட்டின் உரிமையை அபகரிக்க நினைத்த தங்கமயிலுக்கு கோமதி சரியான நோஸ்கட் கொடுத்து விட்டார். ஆனாலும் தனியாக சென்னைக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்ட தங்கமயிலின் கனவு நிறைவேற போகிறது. இதனைத் தொடர்ந்து பாண்டியன், சென்னையில் தங்குவதற்கு தெரிந்த ஆள் மூலம் புக் பண்ணுகிறேன் என்று சொல்கிறார்.

உடனே தங்கமயில், அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா ஆன்லைன்ல புக் பண்ணலாம் என்று சொல்கிறார். இதை கேட்டதும் பாண்டியன் அதிர்ச்சியாகி என்னது ஆன்லைன்ல என்று முழிக்கிறார். ஏனென்றால் இப்படி தான் தியேட்டருக்கு போகும் பொழுது ஆன்லைனில் புக்கிங் பண்ணி தண்ட செலவை இழுத்து விட்டார். அதனால் இப்பொழுது உஷாரான பாண்டியன் தெரிந்த நண்பர்கள் மூலம் ரூம் புக் பண்ண போகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த சம்பவங்கள்

Trending News