திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கதிருடன் ராஜியை கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் பாண்டியனின் மருமகள்.. சரவணனிடம் சிக்கி தவிக்கும் தங்கமயில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலின் அப்பா அம்மா, பாண்டியன் வீட்டிற்கு மகளுக்காக நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள். எப்படியாவது பாண்டியனை சமாதானப்படுத்தி தங்கமயில் இடம் பேச வைக்கலாம் என்று நினைத்து தேவையில்லாத வார்த்தைகளை விட்டு விட்டார்கள்.

அதாவது உங்களுக்கு 26 ஆயிரம் ரூபாய் தான் பிரச்சனை என்றால் அந்த பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று தங்கமயில் அப்பா கூறுகிறார். உடனே பாண்டியன் கோபப்பட்டு எனக்கு பணம் பிரச்சனை இல்லை. எனக்கு தெரியாமல் மறைக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தான் நான் கோபப்படுகிறேன். ஹோட்டல் வாசல் முன்னாடி நின்று கொண்டு இங்கு இருப்பவர்களுக்கு போன் பண்ணி பணம் கேட்டதற்கு எனக்கு போன் பண்ணி தகவலை சொல்லி இருக்கலாம் என்ற கோபம் தான்.

மற்றபடி பணத்துக்காக நான் ஒன்னும் கோபப்பட்டு பேசாமல் இல்லை என்று பாண்டியன் தெள்ளத்தெளிவாக சொல்கிறார். இதை பார்த்த தங்கமயில் அப்பா, பாண்டியனை சமாதானப்படுத்துவதற்காக நாங்கள் இதற்காக மட்டும் வரவில்லை என் மகள் கல்யாணம் நல்லபடியாக முடிந்தால் குலதெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்து பொங்கல் விடுவதாக வேண்டி இருக்கிறோம்.

அதை நிறைவேற்றுவதற்கு நாளைக்கு அனைவரும் போகலாமா என்பதை கேட்க தான் வந்தேன் என்று சொல்கிறார். இப்படி சொன்னதும் பாண்டியன் கொஞ்சம் சமாதானம் ஆகிவிட்டு கண்டிப்பா நாளைக்கு குடும்பத்துடன் வருகிறோம் என்று சொல்கிறார். ஆனால் எந்த கோவில் குலதெய்வம் என்பது யாருக்கும் தெரியாததால் தங்கமயில், நீங்க பேசாமல் அடுக்கடுக்காக போய் சொல்லி என்னை வம்புல மாட்டி விட்டுக் கொண்டே இருக்கீங்க.

இதெல்லாம் எங்க போய் முடியப் போகிறதோ தெரியவில்லை என்று தங்கமயில், அப்பா அம்மாவிடம் புலம்புகிறார். அடுத்ததாக பாண்டியன் கடைக்கு போகும் பொழுது சரவணன் இடம் யார் பேசினாலும் பேசாமல் இருந்தாலும் நீ பேசாமல் இருப்பது தப்பு. அந்த பிள்ளை உன்னை நம்பி வந்திருக்கிறது நீதான் பேசி சமாதானப்படுத்தனோம் என்று சொல்லி போய் விடுகிறார்.

ஆனால் சரவணன், தங்கமயிலை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் வேலைக்கு கிளம்பி விடுகிறார். பொய் பித்தலாட்டம் பண்ணி வந்த தங்கமயில் தான் சரவணன் இடம் மாட்டிக் கொண்டு தற்போது முழித்து வருகிறார். இதனை அடுத்து ராஜி மற்றும் மீனா பஸ் ஸ்டாண்டில் பேசிக்கொண்டு பஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பஸ் எதுவும் வரவில்லை என்பதால் ராஜி டென்ஷன் ஆகிவிட்டார்.

காலேஜுக்கு முக்கியமான ஒரு எக்ஸாம் இருக்கு சீக்கிரமாக போக வேண்டும் என்று பதற்றத்துடன் பேசி கொள்கிறார். அப்பொழுது மீனா நான் வேண்டுமென்றால் ஆட்டோ பிடிச்சு தருகிறேன் நீ போகிறாயா? என்று கேட்கிறார். அதற்கு ராஜி ஆட்டோல போன தேவையில்லாத ஒரு செலவு என்று மாமனாருக்கு ஏற்ற மருமகளாக பேசுகிறார்.

உடனே மீனா, அப்படி என்றால் என்னிடம் வேறொரு வழி இருக்கிறது என்று சொல்லி சைக்கிளில் வரும் கதிரிடம் ராஜியை கோர்த்து விட்டு காலேஜில் டிராப் பண்ண சொல்லிவிட்டார். அத்துடன் என்னுடைய தங்கச்சி பத்திரமாக காலேஜுக்கு கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரவேண்டும் என்று கட்டளையிட்டு கதிருடன் ராஜியை கோர்த்து விட்டார். இப்படியே தொடர்ந்து இவர்களுடைய காட்சிகள் அதிகரித்துக் கொண்டு போனால் பார்க்க கொஞ்சம் சுவாரசியமாக இருக்கும்.

Trending News