சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

படாதபாடு படும் பாண்டியனின் மருமகள்.. அரசி மீது குடும்பத்துக்கு வந்த சின்ன சந்தேகம், சூழ்ச்சி பண்ணும் சுகன்யா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டுக்கு பொய் சொல்லி மருமகளாக வந்த தங்கமயில் குடும்பத்தை இரண்டாக பிரித்து சண்டை மூட்டி சூழ்ச்சி பண்ணப் போகிறார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது ஏன் தான் இந்த குடும்பத்திற்கு மருமகளாக வந்தோம் என்று நினைத்து அவஸ்தைப்படும் அளவிற்கு தற்போது தங்கமயில் படாதபாடு பட்டு வருகிறார்.

டபுள் டிகிரி படிக்காமலேயே படித்தோம் என்று சொன்ன பொய்க்காக தற்போது அல்லல்பட்டு வருகிறார். வேலைக்குப் போக இஷ்டம் இல்லையென்றாலும் வீட்டின் வற்புறுத்தல் காரணமாக தங்கமயில் பொய் சொல்லிக்கொண்டு வேலைக்கு போவது போல் டிராமா பண்ணி வருகிறார். அதே நேரத்தில் சரவணன் ஆபீசுக்கு கூப்பிட வருகிறார் என்பதை தெரிந்து கொண்ட தங்கமயில் அந்த இடத்திற்கு போக வேண்டும் என்று தலைதரித்து ஓடி வருகிறார்.

ஆபிஸ் கேட்டில் இருந்து வெளியே வருவது போல் ஒரு சீன் கிரியேட் பண்ணி சரவணனை நம்ப வைத்து விடுகிறார். சரவணன் நம்பிய நிலையில் இன்னும் எத்தனை நாளைக்கு இதே மாதிரி தங்கமயில் நடிக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. அடுத்ததாக பழனிவேலு கடையில் இருக்கும் போது சரியாக வேலை பார்க்க முடியாமல் நின்று கொண்டே தூங்கிக் கொண்டிருக்கிறார்.

இதைப் பார்த்த பாண்டியன் உன்னை யார் இன்றைக்கு கடைக்கு வர சொன்னா? ஒழுங்கா வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்கலாமா என்று சொல்லுகிறார். உடனே பழனிவேலு அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை மச்சான் என்று சொல்லியதும் பாண்டியன் நக்கல் அடித்து பேசுகிறார். அடுத்ததாக ஹாஸ்பிடல் இருக்கும் மீனாவின் அப்பாவை பார்க்க பாண்டியன் போய்விடுகிறார்.

அங்கே போனதும் சம்மந்தியை பார்த்து பேசிய நிலையில் மீனாவையும் மீனா அம்மாவையும் வீட்டில் போய் ரெஸ்ட் எடுக்க சொல்கிறார். அதற்கு பதில் மாமனாரை பக்கத்திலிருந்து செந்தில் பார்த்துக்கொள்வார் என்று பாண்டியன் சொல்லிவிடுகிறார். பிறகு இவர்கள் கிளம்பி நிலையில் கதிர் செந்திலுக்காக சாப்பாடு வாங்கிட்டு வந்து கொடுத்து பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த பாண்டியன், மீனாவின் அப்பா நன்றாக இருக்கிறார் என்று சொல்லி ஒரு ஆறுதலுக்காக செந்தில் அங்கு இருக்க சொல்லிட்டு வந்திருக்கிறேன் என்று கூறுகிறார். அப்பொழுது அரசி நீ யாரிடமும் ரோட்டில் வைத்து பேசிக்கொண்டு இருந்ததாக பார்த்தவர்கள் சொல்கிறார் என்று பாண்டியன் கேட்கிறார்.

உடனே கோமதி, நீ யாரிடம் ரோட்டில் வைத்து பேசினாய் என்று கோபமாக கேட்கிறார். அப்பொழுது பாண்டியன் அவர் அப்படி கேட்டார் ஆனால் நான் அவரிடம் தெளிவாக சொல்லிட்டேன். என் மகள் யாரிடமும் அப்படி பேசமாட்டாள் நீங்க வேற யாரையோ பார்த்து இருப்பீங்க என்று சொல்லிவிட்டேன். என் மகளைப் பற்றி தெரியாதா என்று பாண்டியன் சொல்லிய நிலையில் கோமதிக்கு கொஞ்சம் சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது.

ஆனால் அரசி குமரவேலுவை சந்தித்து பேசியதும் காதலிக்க ஆரம்பித்து விட்டார் என்பதும் பாண்டியன் குடும்பத்திற்கு தெரியவில்லை. இருந்தாலும் அரசிக்கு ஒரு ஓரமாக பயம் இருக்கிறது. ஆனால் இந்த பயத்தை எல்லாம் போக்கி சக்திவேல் போட்ட பிளானில் குமரவேலுவிடம் அரசியை சிக்க வைக்க வேண்டும் என்று சுகன்யா சூழ்ச்சி பண்ணி அரசி வாழ்க்கையை கெடுக்கப் போகிறார்.

Trending News