சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கதிரை பற்றி தவறாக போலீஸிடம் சொன்ன பாண்டியனின் மச்சான்.. உண்மையை கண்டுபிடிக்க போகும் செந்தில்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக கதிர் ஜெயிலுக்குள் மாட்டிக் கொண்டும் இருக்கிறார். கதிரை காப்பாற்ற வேண்டும் என்று பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் பரிதவித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களின் நிலைமையை கண்டு ராஜியின் குடும்பம் ஏளனமாக பேசி அவமானப்படுத்துகிறார்கள்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத கோமதி, 30 வருடமாக நான் உண்டு என் வேலை உண்டு என்று ஒதுங்கிப் போய் தானே இருக்கேன். ஆனாலும் உங்களுக்கு ஏதாவது ஒன்னு என்றால் என் நெஞ்சம் பதறுதன செய்கிறது. அந்த பாசம் உங்களுக்கு இல்லாட்டலும் பரவாயில்ல, எங்கள சீண்டாமல் இருந்தாலே போதும். மனசாட்சியே இல்லாமல் இப்படி என்னையும் என் குடும்பத்தையும் பழிவாங்க அலையுறீங்களே, நீங்க மனச ஜென்மமா என்று மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்து விட்டார்.

பிறகு பாண்டியன் இவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று சொல்லி குடும்பத்தை வீட்டிற்குள் கூட்டிட்டு போகிறார். வீட்டுக்குள் போனதும் கோமதி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதை பார்த்ததும் பாண்டியன் எப்படியும் நான் கதிரை கூட்டிட்டு வந்து விடுவேன் என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு கிளம்பி விடுகிறார். அங்கே லாயரை கூட்டிட்டு பாண்டியன், சரவணன், செந்தில் மற்றும் பழனிச்சாமி அனைவரும் போய்விட்டார்கள்.

லாயர் ஜாமீன் எடுக்க வரும் பொழுது போலீஸ் அதற்கு அனுமதிக்காமல் கதிரை கூட்டிட்டு வந்து காட்டுகிறார்கள். கதிர் அடி வாங்கி ரத்த காயத்துடன் இருப்பதை பார்த்து மொத்த குடும்பமும் பதறிப் போய்விட்டார்கள். எதற்காக தப்பே பண்ணாத என் பையனை அடித்தீர்கள் என்று பாண்டியன் ஆவேசமாக கேள்வி கேட்கிறார். ஆனால் போலீஸ் தெனாவட்டாக பதில் சொல்லி கதிர் தான் குற்றம் பண்ணியிருக்கிறார் என்பதை முடிவு பண்ணியது போல் பேசுகிறார்.

இப்படி வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் பொழுது அங்கே சக்திவேல் வருகிறார். வந்ததும் போலீசுக்கு ரொம்பவே தெரிந்தவர் என்பதால் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அப்படியே கதிர் மற்றும் பாண்டியன் குடும்பத்தை தவறாக சொல்லி இவர்களுக்கு இதுவே ஒரு பொழப்பு தான். பெண்ணை கடத்திட்டு போய் பணம் பறிப்பது அதன் மூலம் சம்பாதிப்பது என்று வேலையே பண்ணிட்டு வராங்க என்று போலீஸிடம் தவறாக பற்ற வைக்கிறார்.

இதை கேட்டதும் கோபப்பட்ட சரவணன் போலீஸ் முன்னாடியே சக்திவேலிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார். இந்த கேப்பில் கதிர், செந்தில் இடம் எனக்கு இந்த போலீஸ் மேல் நம்பிக்கை இல்ல. இவங்க நான்தான் குற்றவாளி என்பதற்கு ஏற்ப முடிவு பண்ணி என்னிடம் மட்டுமே விசாரிக்கிறார்கள். அதனால் பெண்ணை தேடும் விஷயத்தில் இவர்கள் இறங்க மாட்டார்கள் என்று சொல்லி கதிர் இறக்கி விட்ட இடத்தில் இருந்து பெண்ணை கண்டுபிடித்து கூட்டிட்டு வர செந்திலுக்கு ஐடியா கொடுக்கிறார்.

அதன்படி செந்திலும் நான் அந்த பெண்ணை எப்படியாவது தேடிப் பிடித்து கூட்டிட்டு வருகிறேன் என்று சொல்லி கிளம்பி விடுகிறார். ஆனால் கதிரை இந்த கோலத்தில் பார்ப்பதற்கு ரொம்பவே பாவமாக தான் இருக்கிறது. செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்கும் விதமாக கதிர் சித்ரவதை அனுபவித்து வருகிறார். கடைசில அந்த பெண் எங்கேயும் போகாமல் அப்பாவுக்கு பயந்து போய் நண்பர்கள் வீட்டிற்கு போய் இருக்கும். அந்த பெண்ணை வீட்டிற்கு திரும்ப வந்து விடும் போல தான் தெரிகிறது.

Trending News