சனிக்கிழமை, பிப்ரவரி 8, 2025

பழனிவேலு கல்யாணத்தில் பாண்டியன் வைக்கும் டுவிஸ்ட்.. குமரவேலுவை காப்பாற்றி கிரீன் சிக்னல் கொடுத்த அரசி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பழனிவேலுவின் கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்தாலும் அனைவருக்கும் மனதில் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. இந்த கல்யாணம் ஆவது எந்த தடங்கலும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும். அதிலும் சக்திவேல் மற்றும் முத்துவேல் குளறுபடி பண்ணாமல் இருந்தால் பழனிவேலுவின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

அந்த வகையில் பழனிவேலுக்கு இந்த கல்யாணம் நடக்குமா நடக்காதா என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. அப்பொழுது வாசலில் நின்று கொண்டிருந்த பழனிவேலுவை கூப்பிட்ட முத்துவேல் உன்னுடைய கல்யாணத்தை நாங்கள் பண்ணி வைக்கிறோம் என்று சொல்லி இருந்தோம். ஆனால் நீ என் பேச்சைக் கேட்காமல் அங்கு போய் இருந்து எங்களை அசிங்கப்படுத்துவதில் எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்று கேட்கிறார்.

அதற்கு நீங்கள் கூப்பிட்ட ஒரே காரணத்திற்காக நானும் வந்தேன் ஆனால் ஒரேடியாக என்னுடைய அக்கா குடும்பத்திடம் பேசக்கூடாது என்று சொன்னதனால் எனக்கு விருப்பமில்லை. அதனால் தான் எனக்கு கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்று எங்க அக்கா குடும்பத்துடன் போய் சேர்ந்து விட்டேன். எனக்கு முதல அவங்க தான் முக்கியம் அதன் பிறகு தான் மற்றதெல்லாம் என பழனிவேலு சொல்கிறார்.

அத்துடன் தயவுசெய்து இந்த கல்யாணத்தை மட்டும் நிறுத்தி விடாதீர்கள், நான் கெஞ்சி கேட்கிறேன் என்று பழனிவேலு வாய்விட்டு அண்ணன்களிடம் கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே சக்திவேல் மற்றும் முத்துவேலும் நாங்கள் அப்படியெல்லாம் பண்ண மாட்டோம். நாங்கள் அந்த அளவுக்கு உனக்கு கெடுதல் நினைக்கவும் மாட்டோம். நீ எதை நினைத்தும் கவலைப்படாத நாங்கள் எதுவும் பண்ண மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து பழனிவேலுக்கு நம்பிக்கையை கொடுத்து விட்டார்கள்.

அந்த வகையில் பழனிவேலுவும் கல்யாணத்துக்கு தயாராகும் நிலையில் மேக்கப் எல்லாம் போட ஆரம்பித்து விட்டார். அப்பொழுது செந்தில் சரவணன் மற்றும் கதிரிடம் ரொமான்ஸ் மற்றும் கல்யாண வாழ்க்கையை பற்றியும் பழனிவேலு சந்தேகம் கேட்டு அனைவரும் நக்கல் அடித்துக் கொள்கிறார்கள். அடுத்ததாக அரசி வாசலில் நின்று கொண்டு தோழிக்கு போன் பண்ணி பேசுகிறார். இதனை பார்த்து குமரவேலு அரசியை பார்த்து பேசுவதற்காக பக்கத்தில் போய்விட்டார்.

அப்பொழுது நீயும் நானும் கல்யாணம் பண்ணி விட்டால் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்துவிடலாம். எங்க அப்பாவும் பெரியப்பாவும் பழனிவேலு சித்தப்பா கல்யாணத்துக்கு வந்து விடுவார்கள். அதன் பிறகு நம்ம கல்யாணத்தையும் ஏற்று ஒரே குடும்பமாக மாறிவிடும் என்று அரசிக்கு ஆசை வார்த்தைகளை பேசி மனசை மாற்றுகிறார். அரசியும் அண்ணன்களையும் யாரையும் கூப்பிடாமல் குமரவேலுவை சமாளித்து அனுப்புவதற்கு முயற்சி எடுக்கிறார்.

அந்த நேரத்தில் பாண்டியன் வந்த நிலையில் அப்பா பார்த்தால் தேவையில்லாமல் குமரவேலுக்கு பிரச்சனையாகிவிடும் என்பதால் மறைந்து இருக்க சொல்லி பாண்டியனிடமிருந்து குமரவேலுவை காப்பாற்றி விட்டார். உடனே குமரவேலு என் மீது உனக்கு காதல் இல்லை என்றால் என்னை மாட்டி விட்டு இருக்கலாமே, ஏன் காப்பாற்றி இருக்கணும். அப்படி என்றால் உனக்கும் என் மீது காதல் வந்துவிட்டது நல்லா யோசித்து பதில் சொல்லு என்று போய்விடுகிறார்.

அந்த வகையில் குமரவேலுவின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கும் விதமாக அரசியின் பேச்சு நடவடிக்கையும் இருக்கிறது. ஆனால் இப்பொழுது தான் பாண்டியன் எதிர்பார்க்காத ட்யூஸ்ட் கொடுக்கப் போகிறார். அதாவது பழனிவேலுவின் கல்யாணம் மண்டபத்திற்கு வந்த நிலையில் கல்யாணம் கிட்டும் தருவாயில் புதுசாக பிரச்சினை வரப்போகிறது. அப்பொழுது பழனிவேலுக்கு வேறு வழி இல்லாமல் பாண்டியன் அவருடைய மகள் அரசியை கட்டி வைத்து விடுவார். இதனால் குமரவேலு மற்றும் சக்திவேல் போட்ட பிளானில் தோற்கப் போகிறார்கள்.

Trending News