வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

டீசர் ஏற்படுத்திய பீதி, கங்குவாவை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?

Kanguva : சமீபகாலமாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது. இதனால் திரையரங்கை காட்டிலும் ஒடிடியில் படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று நிறைய ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

இதன் மூலம் நல்ல லாபத்தை ஓடிடி நிறுவனங்கள் பெற்று வருகிறது. அந்த வகையில் இப்போது சூர்யாவின் கங்குவா படத்தையும் பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

சூர்யாவின் கங்குவா

சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் கங்குவா படம் உருவாகி வருகிறது. 3d அனிமேஷனில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு தமிழ், தெலுங்கு என கிட்டத்தட்ட 10 மொழிகளில் கங்குவா படத்தை வெளியிட இருக்கின்றனர்.

மேலும் சூர்யாவின் உறவினரான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்து வருகிறார்.

மிரளவிட்ட கங்குவா டீசர்

சமீபத்தில் கங்குவா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை மிரளவிட்டது. அதுவும் படத்தின் விஎப்எக்ஸ் வேலை அனைவரையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சூர்யாவும் கங்குவா படத்தில் பயங்கரமாக நடித்துள்ளார் என்பது டீசரிலேயே தெரிந்துள்ளது.

கங்குவாவை கைப்பற்றிய அமேசான்

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அகலி படத்தை அமேசான் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியானது. அதேபோல் கங்குவா டீசர் ஏற்படுத்திய பீதியின் காரணமாக போட்டி போட்டு முன்கூட்டியே இப்படத்தையும் அமேசான் வாங்கி இருக்கிறது.

இந்த படத்தின் தென்னிந்திய ரைட்ஸ் மட்டும் அமேசான் கிட்டத்தட்ட 80 கோடிக்கு வாங்கியுள்ளது. மேலும் ஹிந்தி ரைட் இன்னும் விற்பனை ஆகவில்லை. அதுவும் பல கோடிக்கு விற்கப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் தியேட்டரிலும் அமோக வசூலை கங்குவா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News