சமீபகாலமாக சினிமாவில் அனைவரும் பெருமையாக பேசிக் கொண்டிருந்த திரைப்படம் தான் திரிஷ்யம். இந்த படத்தின் இரண்டாம் பாகம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி ரசிகர்கள் அதிகம் பார்த்த திரைப்படம் என சாதனை படைத்தது.
திரிஷ்யம் படத்தின் முதல் பாகம் தான் தமிழில் பாபநாசம் எனும் தலைப்பில் எடுக்கப்பட்டது. மலையாளத்தில் திரிஷ்யம் படத்தை எடுத்த அதே இயக்குனர் ஜீத்து ஜோசப் தான் பாபநாசம் படத்தை இயக்கினார்.
பாபநாசம் படம் வெளியாகி தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. அப்போது படத்தின் இயக்குனரான ஜீத்து ஜோசப்விடம் படத்தை பற்றி பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் தேர்வான நடிகர் யாரென கேட்டனர்.
அதற்கு சித்து ஜோசப் தனக்கு பர்ஸ்ட் சாய்ஸாகயிருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றார். மேலும் இந்த கதையை ரஜினி அவர்களிடம் கூறினேன். அவருக்கும் பாபநாசம் கதை பிடித்துப் போனது.
ஆனால் ரஜினிகாந்த் போலீஸிடம் அடி வாங்கும் காட்சியில் நடிக்க முடியாது. அப்படி நடித்தால் எனது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். மேலும் படத்தின் தயாரிப்பாளரிடம் கமர்ஷியலாக சில காட்சிகள் வைக்குமாறு கூறியுள்ளார்.
ரஜினி அவர்கள் சொல்வதுபோல் கதையில் மாற்றங்கள் செய்தால் படத்தினுடைய ஒரிஜினல் போய்விடும். அதனாலதான் கமல்ஹாசன் அவர்களிடம் கதையைக் கூறினேன். அவரிடமும் போலீஸார் அடி வாங்கும் காட்சியை பற்றியும் சொன்னேன்.
அதெல்லாம் பரவாயில்லை எந்தக் காட்சியாகயிருந்தாலும் நடிக்கிறேன் எனக்கூறி சம்மதித்தார். அதனாலதான் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என ஜீத்து ஜோசப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.