மோகன்லால் நடிப்பில் அமேசான் தளத்தில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் திரிஷ்யம் படத்தில் ரீமேக் வேலைகள் நடந்து வரும் நிலையில் தமிழில் மட்டும் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான திரிஷ்யம் படத்தை 2015ஆம் ஆண்டு பாபநாசம் என்ற பெயரில் கமலஹாசன் ரீமேக் செய்தார். திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்கினார். கமலுக்கு பாபநாசம் படம் நல்ல வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
இந்நிலையில் திரிஷ்யம் 2 வெளியான பிறகு பாபநாசம் 2 படம் வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். திரிஷ்யம் 2 படத்தில்தான் மோகன்லால் போலீசிடம் உண்மையை கூறுவார்.
ஆனால் பாபநாசம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமலஹாசன் இறந்த பையனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் போதே உண்மையை கூறி விடுவார் என்பதை எவ்வளவு பேர் கவனித்திருப்போம் என்பது தெரியவில்லை. திரிஷ்யம் 2 படத்தில் இரண்டரை மணி நேரம் சொன்னதை கமலஹாசன் இரண்டே நிமிட காட்சியில் முடித்து விட்டார்.
காவல்துறையினருக்கு மட்டுமே அந்த விஷயம் தெரியாமல் இருக்கும். படத்தின் தொடர்ச்சி வருமா? வராதா? என்பதை கருத்தில் கொள்ளாமல் கமலஹாசன் அந்த படத்திலேயே அந்த கொலை வழக்குக்குக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பார். இந்த தகவலை சினிமா விகடன் நண்பர்கள் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டனர். ஆனாலும் பாபநாசம் படத்தில் நடித்தது கமலஹாசன் அல்லவா. சினிமா அறிவாளி.
பாபநாசம் 2 படத்தில் வேறு ஏதேனும் கூட்டல் கழித்தலை சேர்த்து இன்னும் சுவாரசியமாக தமிழ் ரசிகர்களுக்கு பரிமாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி பாபநாசம் 2 படம் உருவானால் கண்டிப்பாக திரிஷ்யம் 2 படத்தைப் போல் இருக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் தமிழ் சினிமா நுண்ணறிவாளர்கள்.