புதன்கிழமை, ஜனவரி 22, 2025

வெறித்தனமாக குத்தாட்டம் போடும் கர்ணன் பட இயக்குனர்.. சாண்டி மாஸ்டரை அசரவைத்த வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்பத்தில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து  உள்ளாராம். பிறகுதான் பரியேறும் பெருமாள் படத்தை புதிய கதைக்களத்தில், எதார்த்தத்தை எடுத்துக்கூறும் வகையில் இயக்கி, தமிழ் சினிமாவை வியக்க வைத்தார் மாரிசெல்வராஜ்.

அதேபோல் இந்தப் படத்திற்காக பல விருதுகளை மாரிசெல்வராஜ் பெற்றுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ளது.

இந்தநிலையில் மாரி செல்வராஜ் பயங்கரமாக குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் பலரை வாயடைக்க வைத்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம். அப்போதுதான் மாரி செல்வராஜ் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் என்னென்ன வித்தையெல்லாம் கையில வச்சிருக்கீங்க’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

mariselvaraj
mariselvaraj

மேலும் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ், சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இயக்குனர் மாரி செல்வராஜ் குத்தாட்டம் போட்ட வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

Trending News