கொரோனாவிற்கு பின் தமிழ்நாட்டில் அரசு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழக அரசு பணியாளர்களுக்கான சிவில் எக்ஸாம் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 66 பணியிடங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்.
துணை ஆட்சியர் ஆர்டிஓ, டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் போன்ற பெரிய பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தப் பதவிகளுக்கான தேர்வில் மாரி செல்வராஜின் படம் பற்றிய கேள்வி ஒன்று கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் பாராட்டைப் பெற்றது. அரசு தேர்வில் இந்த படத்தை பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
தலைசிறந்த படைப்பான பரியேறும் பெருமாள் என்ற தமிழ் திரைப்படம் பற்றி விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில் என கேள்வி ஒன்று கேட்கப்பட்டுள்ளது அதற்கு பதில்
இப்படம் சாதிக் கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக் காட்டுகிறது.
இப்படம் மிக சிறந்த படம் என்ற வரிசையில் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது.
இப்படம் திரு மாரி செல்வராஜ் ஆல் இயக்கப்பட்டு நீளம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது போன்ற பதில்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு முன்றுமே சரியான விடை தான் என்று பதில் அளித்து உள்ளனர். எல்லா இப்படி ஈஸியா இருந்த நல்ல இருக்கும்!