வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

மீண்டும் கைகோர்க்கும் ‘பரியேறும் பெருமாள்’ வெற்றிக்கூட்டணி.. கதாநாயகனாக களமிறங்கும் மாஸ் ஹீரோவின் மகன்!

சினிமா துறையில் ஒரு கூட்டணி வெற்றிபெற்றால் அந்தக் கூட்டணியின் மூலம் உருவாகும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவு காணப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மீண்டும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றிக்கூட்டணி கை கோர்க்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் பலரை மெய்சிலிர்க்க வைத்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இயக்கி வந்த கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க விருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் அந்தப் படத்தையும் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்த கோவா ரஞ்சித் தயாரிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

new-flim-cinemapettai

அதுமட்டுமில்லாமல் இந்தப் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். எனவே மீண்டும் ஒரு முறை கைகோர்த்திருக்கும் இந்த வெற்றிக் கூட்டணி மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதாம்.

ஏற்கனவே பா ரஞ்சித் கடந்த ஆண்டு தனது நீலம் புரோடக்சன் சார்பாக தொடர்ந்து ஐந்து படங்களை அடுத்தடுத்து தயாரிப்பு இருப்பதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் அதில் ஒன்றுதான் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News