வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

எதிர்பார்ப்பை கிளப்பிய 6 படங்களின் இரண்டாம் பாகம்.. ஸ்கெட்ச் போட்டு கவுத்துட்ட ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பது வழக்கம்தான். அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன், அதைத்தொடர்ந்து கமலஹாசனின் விஸ்வரூபம், அஜித்தின் பில்லா, விஷாலின் சண்டக்கோழி, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சூர்யாவின் சிங்கம், விக்ரமின் சாமி, சுந்தர் சி யின் அரண்மனை போன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து அடுத்தடுத்த பாகங்களை வரிசையாக வெளியிட்டு வெற்றி கண்டது.

அதேபோன்று இன்னும் சில படங்களின் இரண்டாம் பாகத்தை நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனைப் புரிந்து கொண்ட ஜெயம் ரவி தனது நடிப்பில் வெளியான தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்காக அந்தப் படத்தை இயக்கிய எம் ராஜாவை ஸ்கெட்ச் போட்டுக் கவுத்துத்திருக்கிறார்.

மங்காத்தா 2: வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் 2011-ஆம் வெளியான மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அஜித் வேற லெவல் மாஸ் கட்டிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் தற்போது கதாநாயகனாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்கும் அஜித் மீண்டும் மங்காத்தா 2ல் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் எப்போது தோன்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் வலிமை, அதைத்தொடர்ந்து வினோத் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ஏகே 61  என அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் அஜித் மங்காத்தா-2 படத்திற்கான கதையை ஏற்கனவே வெங்கட் பிரபுவிடம் இருந்து கேட்டுள்ள நிலையில் கால்ஷீட் பிரச்சனையினால் படத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. மேலும் இதில் பிஸியாக இருக்கும் தல-தளபதி இருவரையும் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காக காத்திருப்பதால் விரைவில் மங்காத்தா-2 பற்றிய முடிவு வெளியாகும் என இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்திருக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவன் 2: இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், கார்த்தி, பார்த்திபன், ரீமாசென் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் கடந்த ஆண்டு வெளியானது.

ஆனால் அதன் பிறகு ஆயிரத்தில் ஒருவன் 2 பெரிய படம் என்பதால் தயாரிப்பு பணிக்காக பல கோடி ரூபாய் செலவிட்டதாகவும் எதிர்பார்த்ததை விட பட்ஜெட் எகிறி கொண்டே செல்வதால் படத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். அதன் பிறகு செல்வராகவன் தன்னுடைய தம்பியை வைத்து நானே ஒருவன் என்ற படத்தை இயக்கி தற்போது அந்த படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

ராட்சசன் 2: ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ராட்சசன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன வாயிலாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது என இயக்குனர் ராம்குமார் தெரிவித்த நிலையில், தற்போது வரை அந்த படத்தை குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் கேள்விக்குறியாக இருக்கிறது.

தனி ஒருவன் 2: ஜெயம் ரவி தனது அண்ணன் எம் ராஜா இயக்கத்தில் நடித்து கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதில் ஜெயம் ரவி நேர்மையான IPS அதிகாரியாக தன்னுடைய பிரமாதமான நடிப்பை வெளிக் காட்டி இருப்பார். இவருடன் நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பிராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜெயம் ரவி நடித்த அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தால் அவருடைய அண்ணன் தனி ஒருவன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க தயக்கம் கொண்டார்.

பிறகு ஜெயம் ரவி, இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க கிளம்பி விட்டார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வரும் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாகிறது. பொன்னியின் செல்வன் படத்திற்குப் பிறகு தனக்கு கிடைக்கும் நல்ல பெயரை வைத்து அண்ணனிடம் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க காய் நகர்த்த போகிறார். இதற்கு எம் ராஜாவும் முன் வருவார். அதன் பிறகு விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு துவங்க போகிறது.

துப்பறிவாளன் 2: மிஸ்கின் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் துவங்கப்பட்ட நிலையில், அதற்கான படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்ற போது, அங்கு விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த படத்திலிருந்து மிஸ்கின் விலகினார்.

இதனால் மீதி படத்தை தானே இயக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்தார். ஆனால் அதன் பிறகு விஷால் வேறு படங்களில் நடித்து வந்ததால், தற்போதுவரை துப்பறிவாளன் 2 படம் கிடப்பில் போடப்பட்டு எந்தவித அறிவிப்பும் வெளிவராமல் இருக்கிறது.

இவ்வாறு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் படத்தின் இரண்டாம் பாகங்கள் இன்றுவரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இந்த படங்கள் மட்டும் வெளி வந்தால் நிச்சயம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும். இதை சரியாக புரிந்து கொள்ள ஜெயம் ரவி தனது அண்ணனை சமாதானப்படுத்தி எப்படியாவது தனி ஒருவன் 2 படத்தை எடுத்து முடித்து விடுவார்.

Trending News