இரவின் நிழல் திரைப்படத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. பொதுவாக பார்த்திபன் திரைப்படங்கள் சுவாரசியமாக இருக்கும். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் வித்தியாசமாக இருக்கும் இது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தப்படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. நடத்தி முடித்துள்ளார்.
பார்த்திபன் படத்தில் வேலை செய்வது மிகவும் கடினமானது. இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் இவர் 15வது ஒளிப்பதிவாளராக சேர்க்கப்பட்டார். இவருக்கு முன்னால் 15 ஒளிப்பதிவாளர்கள் வந்து படத்தை பார்த்து மிரண்டு ஓடி விட்டனர்.
அதில் பாதிப்பேர் அதைக் கேட்ட உடனே ஓடி விட்டனர். மீதி சிலர் படப்பிடிப்பு தொடங்கிய பின் ஓடிவிட்டனர். அதன் முக்கியமான மூன்று ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், ரத்னவேலு, ரவிவர்மன் போன்ற ஜாம்பவான்களால் முடியாமல் திணறி ஓடிவிட்டனர்.
பார்த்திபன் படத்தில் பொதுவாக பட்ஜெட் கம்மியாகத்தான் இருக்கும். செலவு ரொம்ப பண்ண மாட்டாரு ஆனால் இந்த படத்தில் ஒரு கழுதையின் கதாபாத்திரத்திற்கு 9 லட்சம் சம்பளமாக வழங்கி உள்ளார்கள். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்தக் கழுதையின் கால்ஷீட் 90 நாட்கள்.
பார்த்திபனை பொருத்தவரை மனதில் பட்டவரை நடிக்க வைத்து விடுவார். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முகம் இருந்தால் போதும். அதே போல் இந்த படத்தில் ஒரு நடிகையின் டச்சப் பாயை பார்த்து பிடித்துப்போக இந்த படத்தின் பார்த்திபனின் இளைய தோற்றத்தில் அந்த பையனை நடிக்க வைத்து விட்டார். அந்த பையனுக்கு சினிமா வாழ்க்கை தொடங்குகிறது.
இந்த படம் பல பிலிம் பெஸ்டிவல் உலகத்தரத்தில் பல பெயர்களில் விருதுகளை வாங்கி உள்ளன. இந்த படம் பார்த்திபனுக்கு பொருளாதார ரீதியாக, புகழ் ரீதியாக மகிழ்ச்சியை கொடுக்கும் என்று வாழ்த்துகிறோம்.