வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மேடையில் மயிரை வைத்து விக்ரமை வாரிவிட்ட பார்த்திபன்.. தங்கலான் கொடுத்த பதிலடி

பார்த்திபன் எல்லாவற்றையுமே வித்தியாசமாக பார்க்க கூடியவர். ஆனால் சமீபகாலமாக அவர் மேடையில் பேசும் விஷயங்கள் சர்ச்சையாக மாறிவிடுகிறது. மேலும் கடந்த முறை பொன்னியின் செல்வன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபனை மேடையில் பேச முன்னதாக அழைக்கவில்லை என ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக பொன்னியின் செல்வன் விழாவில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பார்த்திபன் போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பார்த்திபன் விக்ரமை கடுமையாக விமர்சித்து உள்ளார். அதாவது இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

Also Read : பொண்டாட்டி தொல்லை தாங்காம கழட்டி விட்ட 5 நடிகர்கள்.. இளம் நடிகையுடன் சர்ச்சையில் சிக்கிய பார்த்திபன்

இந்த படத்திற்காக நீண்ட முடியை வளர்த்து உள்ளார். பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனுக்கு செல்லும் போதும் அதே ஹேர் ஸ்டைலில் தான் சென்றார். இந்நிலையில் பார்த்திபன் பேசுகையில் பெண்களை வர்ணிக்க நிறைய வார்த்தைகள் உள்ளது. ஆனால் ஆண்களை வர்ணிக்கும் படி வார்த்தைகள் மிகவும் குறைவு தான்.

மேலும் விக்ரம் குடிமியை வைத்து நிறைய ஸ்டைல் செய்து வருகிறார். தங்கலான் படத்திற்காக தங்களால் முடிந்தவரை விக்ரம் மயிரை வைத்து ஸ்டைல் செய்து எல்லாத்தையும் பார்த்திபன் சர்ச்சையை கிளப்பி உள்ளார். மயிர் என்பது தூய தமிழ் வார்த்தை என்றாலும் மேடையில் பேசியது பலரும் கொச்சையாக இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.

Also Read : சோழ ராஜ்யத்தை யார் கைப்பற்றியது? சிலிர்க்க வைத்த மணிரத்தினம், பொன்னியின் செல்வன்-2 முழு விமர்சனம்

மேலும் அதே மேடையில் பார்த்திபனுக்கு சரியான பதிலடியை விக்ரம் கொடுத்திருந்தார். அதாவது பார்த்திபன் தூய தமிழில் வார்த்தையை அப்படியே விக்ரம் ஆங்கிலத்தில் சொல்லி பார்த்திபனை கலாய்த்து விட்டார். என்னுடைய குடுமி அதாவது ஆங்கிலத்தில் பன் மீது பார்த்திபனுக்கு என்ன தான் பொறாமையோ தெரியவில்லை.

எனக்கு இருக்கிறது, அவருக்கு இல்லை. ஆனாலும் அவர் பெயரிலேயே பன் இருக்கிறது, அதான் பார்த்திபன் என சிரித்துக்கொண்டே விக்ரம் பேசி இருந்தார். இவ்வாறு விக்ரம் மற்றும் பார்த்திபன் மாற்றி மாற்றி கலாய்த்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read : களை கட்டும் சோழர்களின் வரலாறு.. பொன்னியின் செல்வன் 2 எப்படி இருக்கு.? ட்விட்டர் விமர்சனம்

Trending News