வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ப்ளூ சட்டை மாறனுக்கு சரியான பதிலடி கொடுத்த பார்த்திபன்.. விடாமல் துரத்தும் சண்டை

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கும் இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபனுக்கும் விடாமல் சண்டை துரத்தி வருகிறது. அதாவது பார்த்திபன் ஒரே சாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை எடுத்திருந்தார். அதிலிருந்த ஆரம்பித்த சண்டை தான் தற்போது வரை முடியாமல் தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது.

முதலாவதாக இந்திய சினிமாவில் முதலில் சிங்கிள் சாட்டில் எடுக்கப்பட்ட படம் இரவில் நிழல் என்று பார்த்திபன் கூறியிருந்தார். ஆனால் இதற்கு முன்னதாகவே ஒரு படம் வெளியானதாக ப்ளூ சட்டை மாறன் கூறி இரவின் நிழல் படத்தை மோசமாக விமர்சித்திருந்தார். இதனால் ப்ளூ சட்டை மாறன் உருவ பொம்மைக்கு செருப்பு மாலையை பார்த்திபன் ரசிகர்கள் அணிந்தனர்.

Also Read : பார்த்திபன் சொன்னது அத்தனையும் பொய்.. விவாகரத்துக்கான காரணத்தை உடைத்த சீதா

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் இரவின் நிழல் படத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட விருது கிடைத்திருப்பதாக பார்த்திபன் சர்வதேச திரைப்பட விழாவில் அறிவித்திருந்தார். அதற்கு ப்ளூ சட்டை மாறன் இதில் ஏதாவது அங்கீகாரம் உள்ள நிறுவனம் விருது வழங்கி உள்ளதா, எல்லாம் உப்புமா கம்பெனி என்று விமர்சித்திருந்தார்.

இப்போது அதற்கு சரியான பதிலடி கொடுத்து பார்த்திபன். அதாவது சென்னையில் புலப்பை நடத்தி அதில் வரும் ஃபூவாவை தின்று கொழுத்த சிலர் தமிழக அரசு அங்கீகரித்த வழங்கும் விருதினை கேவலமாக நினைக்கிறார்கள். விருதுகள் மற்றும் சான்றிதழ்களைத் தாண்டி ரசிகர்களின் கைதட்டளை பெரிதாக மதிப்பவன் நான்.

Also Read : 2022ஆம் ஆண்டு வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. சென்சார் போர்டை குஜால் ஆக்கிய பார்த்திபன்

மேலும் பெற்ற தாய் மற்றும் பெற்ற பிள்ளையை பெருமையாக நினைப்பவன். மேலும் எதிர்மறையான கருத்துக்களை பகிர்பவர்கள் எதிர்மறையான குணம் உடையவர்கள் என்று கூறியுள்ளார். இது சூசகமாக ப்ளூ சட்டை மாறனுக்கு கொடுத்த சரியான பதிலடி ஆகும்.

ஆனால் இந்த பதிவிற்கும் ப்ளூ சட்டை மாறன் ஏதாவது ஒரு பதிவை போட்டு பார்த்திபனை வம்பிழுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் இந்த சண்டைக்கு எப்போது தான் முடிவு வரும் என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு பார்த்திபனை வம்பு இழுப்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

Also Read : அவார்டு, வசூல் என அள்ளி குவித்த இரவின் நிழல்.. ஆனாலும் சூடுபட்டு விட்டேன் என புலம்பிய பார்த்திபன்

Trending News