ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பத்ரகாளி கையில் துப்பாக்கி.. மிரட்டும் பார்த்திபனின் இரவின் நிழல் பட போஸ்டர்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டவர் பார்த்திபன். இவரது படங்களில் வித்தியாசமான கதைக் களத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர். அதுமட்டுமல்லாமல் பார்த்திபன் தன்னுடைய படங்கள் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொண் டு வருகிறார்.

கடைசியாக பார்த்திபன் நடிப்பில் ஒத்த செருப்பு சைஸ் 7 படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ஒரே ஒரு ஆள் மட்டும் நடித்த இந்தியன் திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தை பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார்.

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்காக ஸ்பெஷல் ஜூரி தேசிய விருது பார்த்திபனுக்கு கிடைத்தது. இப்படத்தைப் பார்த்திபன் ஹிந்தி ரீமேக் செய்துள்ளார். அதில், அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது பார்த்திபன் இரவின் நிழல் படத்தை இயக்கி, நடித்துள்ளார்.

இரவின் நிழல் படம் ஆசியாவிலேயே முதல் முறையாக ஒரு ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர், பிரிஜிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில்0 உட்பட 3 ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் பணியாற்றுகின்றனர்.

IravinNizhal
IravinNizhal

இரவின் நிழல் படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டரில் பாழடைந்த வீட்டின் முன் பார்த்திபன் டார்ச் லைட் அடித்து கொண்டு செல்கிறார்.

IravinNizhal
IravinNizhal

இன்னொரு போஸ்டரில் காளி கையில் சூலங்களோடு துப்பாக்கியும் வைத்திருக்க அதன்கீழ் பார்த்திபன் அலறுவது போல் ஒரு போஸ்டரும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியான நிலையில் இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

Trending News