சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிச்சைக்காரியாக, விபச்**ரியாக கூட நடிப்பேன்.. எல்லாம் பார்த்திபன் கொடுத்த தைரியம்

பார்த்திபன் சிங்கிள் சாட்டில் எடுத்துள்ள இரவின் நிழல் படத்திற்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும் மறுபக்கம் விமர்சனங்களும் எழுந்துள்ளது. இப்படத்திற்காக பார்த்திபன் மெனக்கெட்டு பல விஷயங்களை செய்துள்ளார். ஆனாலும் இதில் சில மோசமான வார்த்தைகள் சரளமாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

இப்படத்தில் சீரியல் நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார். இவர் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் முதலில் குரல் கொடுக்கக் கூடியவர். சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை சம்பவத்தில் பல விஷயங்களை துப்பறிய போராடினார்.

இந்நிலையில் பார்த்திபனுக்கு பல வருடங்களுக்கு முன்பே அறிமுகமானவர் ரேகா நாயர் அவரது இரவின் நிழல் படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுகுறித்து சமீபத்தில் ரேகா நாயர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் ஒரு கலையை கலையாக தான் பார்க்க வேண்டும்.

நான் இரவின் நிழல் படத்தில் நடித்ததால் எந்த அளவுக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோ அதே அளவிற்கு விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் என்னவேண்டுமானாலும் பண்ணுவீங்களா என பலரும் விமர்சிக்கிறார்கள்.

எனக்கு ஹீரோயினாக வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிப்பேன். ஒரு பிச்சைக்காரியாகவோ அல்லது எதுவாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பேன். மேலும் கதைக்குத் தேவைப்பட்டால் எதுவும் இல்லாமல் கூட நடிக்க தயாராக இருப்பதாக ரேகா நாயர் கூறியுள்ளார்.

மேலும் இதுபோன்று நடித்தால்தான் இப்பெல்லாம் கொண்டாடுறாங்க எனக் கூறியுள்ளார். அந்த மோசமான காட்சியில் நடிக்கும்போது பலவித சர்ச்சைகள் வந்த நிலையில் தற்போது கொஞ்சமும் யோசிக்காமல் ரேகா நாயர் பேசியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இது எல்லாமே பார்த்திபன் கொடுக்கும் தைரியம் என கூறி வருகின்றனர்.

Trending News