ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தேசிய விருது கிடைத்ததைவிட இதுதான் வருத்தமாக உள்ளது.. நடிகர் பார்த்திபன் ஆதங்கம்.!

கடந்த 2019ஆம் ஆண்டிற்கான தேசிய விருது வழங்கும் விழா சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் விருதுகளை பெற்றனர்.

இதில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு படத்திற்கு சிறந்த சவுண்ட் எபக்ட் மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகள் கிடைத்தது. விருது கிடைத்தது ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மற்றொரு புறம் சற்று கவலை அளிப்பதாக பார்த்திபன் கூறியுள்ளார்.

அதாவது விருது பெற்ற பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன், “உண்மையாக சொல்வதென்றால் இந்த படத்திற்கு இன்னும் நிறைய விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுகள் ஒரே படத்துக்கு நிறைய பிரிவுகளில் விருது கொடுப்பார்கள். அதுபோல் இந்த படத்திற்கு சிறந்த நடிகர் விருது உள்பட இன்னும் சில விருதுகள் கிடைத்திருக்க வேண்டும்.

மேலும் எனக்கு என்னுடைய படத்தை பற்றி நன்றாக தெரியும். இன்னும் சில விருதுகளை பெற தகுதியான படம் ஒத்த செருப்பு. இந்த படம் என்னுடைய தனித்துவமான படம். அவ்வாறு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஏன் நடிப்புக்கு எனக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உள்ளது” என தனது ஆதங்கத்தை பார்த்திபன் வெளிப்படுத்தியுள்ளார்.

பார்த்திபனின் ஆதங்கமும் சரிதான். தனி ஒரு ஆளாக படம் முழுக்க நடித்து அவரே இயக்கிய ஒத்த செருப்பு படம் பலரது பாராட்டையும் பெற்றது. தற்போது தேசிய விருது பெறும் அளவிற்கு தகுதி வாய்ந்த இந்த படத்திற்கு மிக பெரிய மீடியா நிறுவனம் விருது கிடைக்காதது அந்த சமயத்தில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அதைவிட பெரிய விருதான தேசிய விருதையே பார்த்திபன் தட்டி தூக்கி விட்டார்.

os 7

தேசிய விருது வாங்கிய பின் கூட எனக்கு வருத்தம் தான் என்பது போன்று நண்பர்களிடம் உரையாடியுள்ளார் பார்த்திபன். இப்படிப்பட்ட கலைஞரை எப்படித்தான் திருப்திப்படுத்துவது என்பது தெரியவில்லையாம். தற்போது பார்த்திபன் இரவின் நிழல் என்ற படத்தை சிங்கிள் ஷார்ட்டில் எடுத்துள்ளாராம். உலகில் இதுவரை யாரும் செய்யாத முயற்சியாக இப்படம் உருவாகி வருகிறது. எனவே இந்த படத்திற்கும் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News