
பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இரவின் நிழல். இப்படத்திற்காக கிட்டத்தட்ட ஆறு மாதமாக பசி, உறக்கம் இன்றி வேலை பார்த்ததாக சமீபத்தில் பார்த்திபன் கூறியிருந்தார். ஏனென்றால் இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அனைத்து பிரபலங்களும் பிரமித்து போனதாக கூறியுள்ளனர்.
இரவின் நிழல் படத்திற்கு ஒரு சொதப்பல் கூட வந்து விடக்கூடாது என்பதற்காகத் இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பார்த்திபன் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன பிறகு பார்த்திபன் அந்த நிகழ்வுக்கு வருந்தி மன்னிப்பு கேட்ட ஒரு வீடியோவும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு படத்தின் புரமோஷனுக்காக பார்த்திபன் பங்குபெற்று இருந்தார். அப்போது இப்படத்தை பற்றி பல சுவாரசியமான விஷயங்களை பார்த்திபன் பகிர்ந்துகொண்டார். இப்படம் கண்டிப்பாக அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்.
உலக அளவில் இரவின் நிழல் படத்தை எடுத்துச் செல்வதற்காக தான் இப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைக்க வைத்ததாக பார்த்திபன் கூறியிருந்தார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றியும் பார்த்திபன் புகழ்ந்து பேசி இருந்தார்.
அப்போது இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக உள்ள ரக்சன் பற்றி பார்த்திபன் சில விஷயங்களை கூறினார். அதாவது ரக்சன் தனியாக படம் பண்ணுவதாக கேள்விப்பட்டேன் அடுத்த சிவகார்த்திகேயன் நீங்கள்தான் என பார்த்திபன் கூறியுள்ளார். ஏற்கனவே ரக்சன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும் ரக்சன் தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார். விஜய் டிவியில் இருந்து வந்த ஏராளமான பிரபலங்கள் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் மிக விரைவில் படங்களில் கதாநாயகனாக ரக்சன் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.