ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பார்த்திபனை மேடையில் அசிங்கப்படுத்திய இளையராஜா.. மூக்கு உடைந்து நின்ற சம்பவம்

ஒரு விருது விழா மேடையில் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபனை இளையராஜா அநியாயத்திற்கு அசிங்கப்படுத்தியது பார்க்கும் ரசிகர்களுக்கே சங்கடமாக இருக்கும் நிலையில் அதை அனுபவித்த பார்த்திபனுக்கு எப்படியிருக்கும் என தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பார்த்திபன் எப்போதுமே தன்னுடைய பதிவுகளை நேரடியாக சொல்லாமல் அதற்கு எதுகை மோனையிட்டு தமிழை அழகாக வர்ணித்து எழுதுவார். இது பலருக்கும் பிடித்த ஒன்று. அதுமட்டுமில்லாமல் அவரது படங்களும் சமீப காலமாக உலக தரத்தில் அமைந்து வருகின்றன.

அந்தவகையில் பார்த்திபன் கடைசியாக இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் நாடு கடந்து பல பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்ததாக ஓர் இரவின் நிழல் என்ற படத்தை ஒரே ஷாட்டில் மொத்தப் படத்தையும் எடுக்க உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது திரைப்பட விருது விழாக்களை தொகுத்து வழங்குவார். அப்படி தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று நடத்திய விருது விழா ஒன்றில் பார்த்திபன் தொகுப்பாளராக இருந்தார். அதில் விருந்தினராக இளையராஜா வந்திருந்தார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த இளையராஜாவிடம் கிட்டார் கொடுத்து வாசிக்கச் சொன்னார் பார்த்திபன். ஆனால் உனக்கு இசையைப் பற்றி என்ன தெரியும், இதெல்லாம் உனக்குத் தேவையில்லாத வேலை என மேடையிலேயே அசிங்கப்படுத்திவிட்டார் இளையராஜா.

அந்த வீடியோவை இப்போது வரை ரசிகர்கள் இணையத்தில் கட் செய்து போட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு பார்த்திபன் கொடுத்த பதிலடி தான் தற்போது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. குரு சிஷ்யன் என்ற பாணியில் அவர் கொடுத்த பதிலடி ரசிகர்களை அந்த இனியும் கேள்வியை கேட்க வேண்டுமா? என யோசிக்க வைத்துள்ளது.

parthiban-replied-to-fans
parthiban-replied-to-fans

Trending News