உருவாக்கினவனுக்கு தான் வலி தெரியும்.. என் product நல்லா இல்லனு மக்கள் சொல்லட்டும்.. Reviewers தேவை இல்லை

parthiban
parthiban

கங்குவா படத்துக்கு பயங்கரமான ப்ரோமோஷன் செய்து ரிலீஸ் செய்தபோதிலும் கூட, படம் ஒரு தோல்வி படமாகவே அமைந்துள்ளது. விமர்சனமும் சரி இல்லை, அதனால் ஆட்டோமேட்டிக் ஆக வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நடிகர் சூர்யா பெருமளவில் இந்த படத்தை நம்பி இருந்தார்.

இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கமும் அதிரடி முடிவை எடுத்தது. அப்படி, இனி படங்கள் வெளியாகி 1 வாரத்திற்கு விமர்சனம் என்ற பெயரில் யூடியூபர்கள் யாரும் அவரது தனிப்பட்ட வன்மத்தை வெளிப்படுத்த கூடாது, பப்ளிக் ரிவியூ எடுக்கக்கூடாது என்று ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது விமர்சகர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இதை தொடர்ந்து இது தொடர்பாக தற்போது நடிகரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான பார்த்திபன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசியது, தற்போது பேசுபொருளாகவும் மாறியுள்ளது..

Review தேவை இல்லை..

இது தொடர்பாக அவர் கூறியதாவது, “நான் பல கோடி ரூபாய் செலவு செய்து, கஷ்டப்பட்டு ஒரு product-ஐ உருவாக்கி மார்க்கெட்டில் கொண்டு போய் வைக்கிறேன். அதை மக்கள் விமர்சிக்கட்டும். மக்கள் சொல்லட்டும் அந்த product பிடித்திருக்கிறதா இல்லையா என்று. ஆனால் அவர்களை வாங்கவிடாமல் ஒரு சிலர் review செய்கிறேன் என்ற பெயரில், ரீச் ஆகவிடாமல் செய்கிறார்கள்.”

“அப்படி பட்ட reviewers தேவை இல்லை. உண்மையில் விமர்சகர்களால் தான் ஒரு படம் ஓடவேண்டும் என்றால், அப்படி படம் ஓட தேவையே இல்லை. உருவாக்கினவனுக்கு தான் வலி தெரியும். இரண்டு நாள் கூட ஒரு படத்தை ஓட விடாமல் செய்து விடுகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் நானும், விமர்சனங்கள் தேவை இல்லை என்று தான் கூறுகிறேன் ” என்று கூறியுள்ளார். இது தற்போது பேசும்பொருளாக மாறி உள்ளது.

Advertisement Amazon Prime Banner