வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித் கையை பிடிக்க நினைக்கும் பார்த்திபன்.. இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா?

சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று தற்போது வரை ஓடிக்கொண்டு இருக்கும் பிரபலம் நடிகர் பார்த்திபன். இவர் பல வித்தியாசமான முயற்சிகளை கையாண்டாலும் தற்போது வரை இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கடைசியாக சிங்கிள் சாட்டில் இரவின் நிழல் என்ற படத்தை எடுத்திருந்தார்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பார்த்திபன் அஜித்தை பற்றி பேசியது தற்போது வைரலாக பரவி வருகிறது. அஜித், பார்த்திபன் இணைந்து நீ வருவாயா, உன்னை கொடு என்னை தருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

Also Read :கமல்ஹாசனுக்கு ஆண்மை, தைரியம் ஜாஸ்தி உண்டு.. மறைமுகமாக யாரை குத்திக் காட்டுகிறார் பார்த்திபன்?

இதில் கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு முன்பு வெளியான நீ வருவாயா படத்தில் அஜித் கையை பிடித்த நான் நடப்பேன். அதேபோல் இப்போது அஜித் என் கையைப் பிடித்து வந்தால் அவருக்காக நான் ஒரு கதை வைத்துள்ளேன் என பார்த்திபன் கூறியுள்ளார். அஜித் இப்போது மாஸ் இடத்தில் உள்ளார்.

தன்னுடைய கடின உழைப்பால் மட்டுமே அஜித் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுள்ளார். அதுமட்டுமன்றி தன்னுடன் பணியாற்றிய இயக்குனர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கக் கூடியவர் அஜித். அந்த வகையில் சிறுத்தை சிவா, வினோத் போன்றவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கொடுத்து வந்தார்.

Also Read :பயமுறுத்திய சினிமா இண்டஸ்ட்ரி.. விஜய்யை பின்பற்றும் அஜித்

தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்த விக்னேஷ் சிவனின் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்க உள்ளார். இந்நிலையில் பார்த்திபன் பேசுகையில் எனது ரொம்ப நாள் ஆசை என்னவென்றால் அஜித்தை வைத்து ஒரு அவார்ட் ஃபிலிம் படத்தை இயக்க வேண்டும் என்பதுதான்.

அது மிக விரைவில் நடக்கும் என நான் நம்புகிறேன். ஆனால் தற்போது அஜித் தொட முடியாத உயரத்தை அடைந்துள்ளார். இதனால் என்னால் முடிந்த வரை முயற்சி செய்வேன். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் நடந்தால் கண்டிப்பாக நன்றாக இருக்கும்.

Also Read :அஜித், விஜய், கமலுடன் ஜோடி போட்ட பிரபல நடிகை.. சூப்பர் ஸ்டாருடன் மட்டும் கிடைக்காத வாய்ப்பு

Trending News