திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கௌதம் மேனன் போல் பார்த்திபனையும் வச்சி செய்த பிரதீப்.. பதிலடி கொடுத்த நக்கல் மன்னன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கம் மற்றும் நடிப்பில் கடைசியாக வெளியான லவ் டுடே படம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது. இப்போது உள்ள இளைஞர்களின் காதல் எப்படி இருக்கிறது என்பதை பிரதிபலிக்கும் விதமாக லவ் டுடே படம் அமைந்தது.

இந்த படத்தில் பல இயக்குனர்களை வைத்து பிரதீப் ரங்கநாதன் கிண்டல் செய்திருப்பார். எடுத்துக்காட்டாக இயக்குனர் கௌதம் மேனன் போல் ஒருவரை சித்தரித்து பேச வைத்திருப்பார். அப்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கௌதம் மேனன் என்னை கூப்பிட்டால் நானே வந்து பேசி இருப்பேன் என்று கூறினார்.

Also Read : சிம்பு, கௌதம் மேனன் இடையே பிரச்சனைக்கு இதுதான் காரணம்.. VTV2-க்கு வாய்ப்பு இருக்கா?

இந்நிலையில் பார்த்திபனையும் பிரதீப் கிண்டல் செய்து இருக்கிறார். அதாவது லவ் டுடே படத்தில் ஹீரோயின் உடன் சண்டை போடும்போது பிரதீப் நண்பர்கள் ஏண்டா நல்லா தானே பேசிகிட்டு இருந்த, திடீர்னு பார்த்திபன் மாதிரி பேசுற என்ன நக்கல் அடித்து இருப்பார்கள்.

இதற்கான காரணம் பார்த்திபனுடன் இருக்கும் முன் விரோதம் தான் என்றும் அதை இந்த படத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என பார்த்திபன் கூறியுள்ளார். அதாவது கோமாளி படம் வெளியான போது பார்த்திபனின் உதவி இயக்குனர் கிருஷ்ணகுமார் இப்படத்தின் கதை திருட்டு கதை என கூறியிருந்தார்.

Also Read : இரவின் நிழலால் மனம் நொந்து போன பார்த்திபன்.. வெறுத்து போய் எடுத்திருக்கும் முடிவு

இதற்கு ஆதரவாக பார்த்திபனும் குரல் கொடுத்திருந்தார். இதை மனதில் வைத்துக் கொண்டு தான் இயக்குனர் பிரதீப் லவ் டுடே படத்தில் பார்த்திபனை கலாய்த்து உள்ளார். ஆனால் பார்த்திபன் லவ் டுடே படத்தை பார்த்து ஆச்சரியப்பட்டதாக பல மேடைகளில் பேசி உள்ளாராம்.

என்னை விமர்சித்தாலும் இவ்வாறு மேடையில் பாராட்டி பேசுவது என்னுடைய மெச்சூரிட்டி, ஆகையால் பிரதீப் ரங்கநாதன் போக போக இதை புரிந்து கொள்வார் என பார்த்திபன் நக்கலாக பேசி இருந்தார். இதற்கும் பிரதீப் அடுத்த படத்தில் ஏதாவது வச்சு செய்வார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also Read : 3 தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹிரவாக பிரதீப் ரங்கராஜன்.. செகண்ட் ஹீரோவாய் களமிறங்கும் விஜய் சேதுபதி

Trending News