வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

திமுக, அதிமுகவை விட அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தவெக! மணி வார்த்தை பொய் ஆகுமா?

திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிட கட்சிகளைவிட புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சிக்கு அதிகளவு உறுப்பினர்கள் இருப்பதாக பிரபல ஜர்னலிஸ்ட் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் தளபதி விஜயின் வருகை எல்லோராலும் கூர்ந்து பார்க்கப்படுகிறது. அவர் அரசியல் படங்களில் நடித்தபோது, அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள், வசனங்கள், படத்தின் தலைப்புக்கு என பல தடைகள் வந்தன. அதைத்தாண்டி இன்று அரசியல் கட்சி ஆரம்பித்து முதல் மாநாடு நடத்த ஏற்பாடு செய்தபோதும் பல்வேறு தடைகள் ஏற்பட்டதாக அவரது கட்சித் தொண்டர்கள் கூறினர்.

அதையும் தாண்டி, தவெக முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இம்மாநாட்டிற்காக தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செய்து வருகிறார். இம்மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் விஜய் பல நிபந்தனைகள் வெளியிட்டு கட்டுக்கோப்பாக மாநாடு நடக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தவெகவின் மாநாடிற்கு மட்டும் பல்வேறு நிபந்தனைகள் விதித்த அரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு நிபந்தனை விதித்தார்களா? ஆளுங்கட்சியின் மாநாடுகளுக்கு நிபந்தனைகள் விதித்தார்களா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே விஜயின் அரசியல் வருகை, அவரது கட்சியின் முதல் மாநாடு இதைப்பற்றி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளும், ஆளுங்கட்சியும் விஜய்கு எதிரான கருத்துகளைக் கூறி வந்தாலும் சினிமாத்துறையினரும், அரசியல் விமர்சகர்களும் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவான கருத்துகளை கூறி வருவது தவெக தொண்டர்களுக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. இதை அவர்கள் தளபதி 2026 சட்டசபைத் தேர்தலில் வாகை சூடுவதற்காக ஆருடமாக எடுத்துக் கொண்டு களப்பணி ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கட்சிப் பெயரை அறிவித்ததுடன், அக்கட்சிக்கு என தனி செயலியை அறிமுகம் செய்து, அதில் உறுப்பினர்களாக இணையலாம் என்று அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்கத்தினர் என பலரும் அதில் இணைந்து வருகின்றனர். விஜய்யின் இந்த ஸ்மார்ட்டான திட்டத்தில் பல லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சி தளபதியின் தவெக என்று பிரபல ஜர்னலிஸ்ட் மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மணி தெரிவித்திருப்பதாவது:

தமிழக பாஜகவில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக கூறுவது பொய். அதேபோல் எந்தக் கட்சிக்கும் 1 கோடி உறுப்பினர்கள் எல்லாம் இல்லை. எல்லாம் ஏமாற்றுகிறார்கள். ஆனால், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஓரளவு வலு உள்ளது.பவர்புல் கட்சிகள் என்றால் இவ்விரு கட்சிகள் தான். ஆனால் இவ்விரு கட்சிகளும் தங்களுக்கு 2 கோடி உறுப்பினர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். அப்படியில்லை.

இதில், ஓரளவு ஆச்சர்யப்படத் தக்க விஷயம் என்னவென்றால் விஜய். 60 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இதில் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் இணைந்துள்ளனர். அதில், பிராசஸ் வோட் ஐடி, ஆதார் ஐடியை அப்லோடு செய்யனும். அதற்கு ஒடிபி எண் வந்த பின் தான் உறுப்பினர் கார்டு கிடைக்கும். போலி உறுப்பினர்களைத் தடுக்க, இப்படி உறுப்பினர்களைச் சேர்த்திருக்கும் ஒரே கட்சி தவெக தான். திமுக, அதிமுகவுக்கு அவ்வளவு எண்ணிக்கை இல்லை. தேர்தலில் நின்று ஜெயிப்பது வேறு’’ என்று தெரிவித்துள்ளார்.

Trending News