சினிமாவைத் தாண்டி தற்போது முக நூல்களும் இன்ஸ்டாகிராம் நடிகர்களை மிகவும் பிரபலமாக செய்கிறது. அதன் மூலமே ரசிகர் பட்டாளம் ஆதரவு அதிகரித்து வருகின்றது. கவர்ச்சியான வீடியோக்கள் புகைப்படங்கள் என்று இணைய தளமே களைகட்டி வருகிறது. ஒரு சில வீடியோக்கள் புகைப்படங்கள் பல சர்ச்சைகளையும் மாற்றி வருகின்றன.
அந்தவகையில் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல பார்வதி நாயரின் புகைப்படம் ஒன்று தேசிய கொடியை அவமதித்ததாக பல கண்டனங்கள் வந்துள்ளன. பார்வதி நாயர் 2012ல் மலையாளத்தில் “பாபின்ஸ் “என்ற திரைப்படம் மூலமாக தனது திரைப்படத்தை பயணத்தை தொடர்ந்தார் .அதன் பிறகு ஜெயம் ரவியின் “நிமிர்ந்து” நில் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
![parvati nair](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/paravati-nair.jpg)
திரைப்படத்தை தொடர்ந்து என்னை அறிந்தால் ,உத்தம வில்லன் ,மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ள பார்வதி இன்ஸ்டாகிராமில் படு பிஸியாக இருப்பவர். அவ்வப்போது போட்டோ ஷூட் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்டேட் செய்து கொண்டே இருப்பவர்.
![parvati nair](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/paravati-nairr.jpg)
இந்நிலையில் 75வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை துப்பட்டா போல அணிந்து அதை காற்றில் பறக்க விட்டவாறு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு பல்வேறு தரப்பினரும் தேசிய கொடியை அவமதித்ததாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதே போட்டோவே தான் அவர் கடந்த வருடமும் வெளியிட்டார் என்றும் கூறப்படுகிறது.