வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

4 வயது மூத்த நடிகையை திருமணம் செய்யும் பசங்க பட சின்ன பையன்.. ட்ரெண்டாகும் புகைப்படம்

பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரங்கள் பல நடிப்பில் வெளியான திரைப்படம் பசங்க. இந்த படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்கள் தற்போது படங்களில் ஹீரோவாக நடித்த வருகிறார்கள்.

அந்த வகையில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் கிஷோர். இந்நிலையில் சமீபத்தில் பசங்க படத்தில் நடித்ததற்காக கிஷோருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்திருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் கிஷோர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்.

Also Read : தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட தரமான 5 துணை நடிகர்கள்.. ஹீரோவுக்கு நிகராக பாராட்டும் ரசிகர்கள்

அந்த வகையில் தனது காதலிக்க பிறந்த நாள் கூறிய போட்டோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதாவது சின்னத்திரை நடிகையான ப்ரீத்தி குமாரை கிஷோர் காதலித்து வருகிறார். ப்ரீத்தி குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து பல சின்னத்திரை தொடர்களில் ப்ரீத்திக்குமார் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது பிறந்தநாள் அன்று கிஷோர் வாழ்த்துக் கூறி தனது காதலி என அறிமுகம் செய்து வைத்திருந்தார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு நாம் கணவன், மனைவியாக உனது பிறந்தநாளை கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார்.

Also Read : நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த 5 துணை கதாபாத்திரங்கள்.. கமலே வியந்து பார்த்த MS பாஸ்கர்

இந்நிலையில் கிஷோரை விட ப்ரீத்தி குமார் 4 வயது மூத்தவராம். பல சினிமா பிரபலங்கள் தன்னைவிட மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த வகையில் காதலுக்கு வயதும் தடை இல்லை என்பதை கிஷோர் வைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு இவர்களது திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

மேலும் இப்போதே இந்த ஜோடிக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கிஷோர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஆகையால் அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

kishore-preethi-kumar

Also Read : கம்பீரத்தை விட்டுக்கொடுக்காமல் மிரட்டுய 5 நடிகர்கள்.. அதிலும் சார்பட்டா ரங்கன் வாத்தியாரே அடிச்சுக்க ஆளே இல்ல

Trending News