தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்றன. அதனால் தற்போது ஆர்யாவை வைத்து தொடர்ந்து பல இயக்குனர்களும் படங்களை இயக்கி வருகின்றனர்.
இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் ஆர்யாவின் நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்திற்காக இவருடைய உழைப்பு மிகவும் சிறந்தது என பலரும் கூறினர்.
![pasupathi meme](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/pasupathi-memes-a-a.jpg)
ஆர்யாவை தொடர்ந்து இப்படத்தில் நடித்த வேம்புலி,டான்சிங் ரோஸ் மற்றும் ரங்கன் வாத்தியார் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
![pasupathi meme](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/pasupathi-meemms-a.jpg)
எப்போதும் ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அது ஓரளவிற்கு கொண்டாடினால் மட்டுமே ரசிகர்களுக்கு வெறுப்பு அடையாமல் இருப்பார்கள். ஆனால் சார்பட்டா பரம்பரை திரைப்படம் நல்ல வெற்றி பெற்றிருந்தாலும் படக்குழுவினர் அளவுக்குமீறி ஆகா ஓகோ என்று பேசித் தள்ளினர்.
![pasupathi meme](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/pasupathi-memes.jpg)
இதனால் ரசிகர்கள் இப்படத்தில் இடம் பெற்ற ரங்கன் வாத்தியாரே சமூகவலைதளங்களில் வச்சு செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பவசந்தபாலன் இயக்கத்தில் வெயில் படத்தில் நடித்த பசுபதியின் ரொமான்ஸ் காட்சிகளை பதிவிட்டு இயக்குனருக்கு ரசிகர் ஒருவர் அனுப்பியுள்ளார். இதனை இயக்குனர் பெருமையாக எடுத்துக்கொண்டு அப்படத்தின் அனுபவத்தைப் பற்றி கூறியுள்ளார்.
![pasupathi meme](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/pasuoppathi.jpg)
மேலும் பசுபதி நடித்த காட்சிகள் அனைத்தும் பல பிரபலங்கள் பெருமையாக பேசி வந்தனர். மேலும் ஒரு சில ரசிகர்களும் பசுபதி படத்தில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் கூறி வந்தனர். தற்போது ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
![pasupathi meme](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/pasupathi-memes-a.jpg)