ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

அனிகாவுடன் ஆங்கிலப் படத்தில் நடித்துள்ள சார்பட்டா பசுபதி.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் நடிப்பில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் பசுபதி. வில்லன் நடிகராக தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய பசுபதி குணச்சித்திரம், நகைச்சுவை, கதாநாயகன் போன்ற அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் அசத்தியவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் காலடி பதித்தவர்.

வெயில், விருமாண்டி, ஈ, தூள் போன்ற படங்களில் அட்டகாசமாக நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். தற்போது அவர் நடித்து வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்தப்படத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்று அசத்தியுள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்த பசுபதி ஆங்கில மொழியில் கூட ஒரு படம் நடித்துள்ளார். “தி லாஸ்ட் விஷன்” என்ற ஆங்கிலப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து அனைவரையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

“தி லாஸ்ட் விஷன்” படம் மலையாள டைரக்டர்களால் எடுக்கப்பட்ட படம். சஸ்பென்ஸ் த்ரில்லராக எடுக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விசுவாசம் படத்தில் நடித்த அனிகா குழந்தை நட்சத்திரமாக இதில் நடித்திருப்பார்.

குழந்தையை தொலைத்த ஒரு தந்தையை மையமாக வைத்து உருவாக்கிய படம்தான் தி லாஸ்ட் விஷன். இதில் பசுபதி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ஆங்கில மொழியிலும் முத்திரை பதித்துள்ளார்.

anikha
anikha

Trending News