தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களையும் தாண்டி சில குணச்சித்திர நடிகர்களின் படங்கள் எப்போதுமே ரசிகர்கள் நினைவில் நீங்காமல் இருக்கும். அதிலும் ஒருசில குணசித்திர நடிகர்களுக்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு உள்ளது.
அப்படிப்பட்ட நடிகர்தான் பசுபதி. 1999 ஆம் ஆண்டு வெளியான ஹவுஸ்ஃபுல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பசுபதி. அதன் பிறகு பல படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.
ஆனால் ஒரு சில படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதிலும் பசுபதி வில்லனாக நடித்த படங்கள் எல்லாமே வேற லெவல் ஹிட்டுதான். ஒரு கட்டத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் பசுபதி காமெடி நடிப்பில் கவர்ந்த திரைப்படங்கள் என்றால் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் பசுபதி பல படங்களில் நடித்திருந்தாலும் இந்த ஆறு படங்களை என் வாழ்நாளில் மறக்க முடியாது என சில படங்களில் குறிப்பிட்டுள்ளார்.
அவை தான் விருமாண்டி, மஜா, வெயில், குசேலன், அசுரன், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆறு படங்களிலும் பசுபதியின் நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்திலும் பசுபதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இவற்றில் எந்த படம் உங்களைக் கவர்ந்தது என்பதை ரசிகர்கள் கமெண்டில் தெரிவிக்கலாம்.