வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆஸ்கார் இல்ல, பாஸ்கர் விருது கூட கிடைக்காது.. பதான் புகட்டிய பாடம்! கிழித்து தொங்க விட்ட பிரகாஷ்ராஜ்

பதான் படம் உலகம் முழுவதும் 800 கோடியை தாண்டி வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படம் பாலிவுட்டின் மிகப்பெரிய படமாகவும் அமைந்துவிட்டது. ஏனென்றால் சில வருடங்களாகவே பாலிவுட்டின் எந்த படங்களும் சரியாக ஓடாததால் பதான் படத்தின் மூலம் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கிறது.

அதிலும் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த வெற்றிகளையும் கொடுக்காத ஷாருக்கானுக்கு பதான் படத்தின் மூலம் மறுபடியும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தை வெளியிடக் கூடாது என மத்தியில் ஆளும் கட்சிகளும், அந்தக் கட்சியை சேர்ந்தவர்களும் நிறைய கருத்துக்களை தெரிவித்தனர்.

Also Read: பிரகாஷ்ராஜின் உண்மை முகம்.. 50 கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்

‘இந்துக்கள் இந்த படத்தை பார்க்காதீர்கள். படத்தில் காவி நிறத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள்’ என்று சோசியல் மீடியாவில் பதான் படத்திற்கு எதிராக நிறைய விஷயங்கள் கிளம்பியது. அதையும் தாண்டி படம் வெற்றி பெற்று இருக்கிறது என தற்போது பிரகாஷ்ராஜ் சந்தோசமாக சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆளும் கட்சியை சுத்தமாகவே மதிக்கவில்லை என்பது தெரிந்து விட்டது. எப்போதுமே ‘just asking’ என்ற ஹேஷ் டேக் மூலம் தன்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பிரகாஷ்ராஜ் பதிவிடுவார். அதேபோல் தான் பதான் படத்திற்கு பல குடைச்சலைகள் கொடுத்த மத்தியில் ஆளும் கட்சியை குறித்து பிரகாஷ் ராஜ் விமர்சித்ததுடன், அந்த படத்தின் வெற்றிக்காக பட குழுவை பாராட்டியுள்ளார்.

Also Read: பிரகாஷ்ராஜ் லெவலுக்கு பார்வையாலேயே மிரட்டிய வில்லன்.. கமலுக்கே டஃப் கொடுத்தவருக்கு வந்த கெட்ட நேரம்

இதைத்தொடர்ந்து தி காஷ்மீர் பைல்ஸ் என்ற ஹிந்தி படம் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டாலும் வெறும் 30 கோடியை கூட வசூல் செய்ய முடியவில்லை. இது பயங்கர மத பிரச்சார படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு கதை எழுதி, இயக்கிய விவேக் அக்னிஹோத்திரி என்பவர் தி காஷ்மீர் பைல்ஸ் ஒரு சிறந்த படம், எதார்த்தமான படம். எதற்காக இந்த படத்திற்கு ஆஸ்கர் கிடைக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ், ‘உங்களை போன்ற ஆளுங்கள், எந்த படம் எடுத்தாலும் ஆஸ்கர் இல்ல பாஸ்கர் விருது கூட கிடைக்காது. உங்களை எல்லாம் மக்கள் இன்னும் மோசமாகத்தான் தூக்கி எறிவார்கள். இனி வரும் படங்களும் ரசிகர்களுக்கு பிடித்தால் மட்டும் போதும் அந்த படம் வெற்றி பெறும். மத்தியில் ஆளும் கட்சிக்கு பதான் படம் நல்ல பாடத்தை கற்பித்துக் கொடுத்திருக்கிறது என்றும் பிரகாஷ்ராஜ் கிழித்து தொங்க விட்டுள்ளார்.

Also Read: அந்தரங்க உடையில் ஆட்டம் போட்ட நடிகை.. அட்லி கூட சேர்ந்த நேரமோ என்னவோ சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

Trending News