திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பவானி அமீர் இடையே இருப்பது நட்பா, காதலா.. வீடியோ பார்த்து கண்டுபிடித்த ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனும் போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது உணர்ச்சிகரமான விஷயங்கள் நடக்கக்கூடும். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்காதவர்கள் கூட அந்த ஒரு வார எபிசோட்யை கண்டிப்பாக பார்க்க விரும்புவார்கள்.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களையும் விஜய்டிவி வெளிப்படையாக காட்டி வருகிறது. ஆனால் ஒரு நாள் நடக்கும் முழு விஷயங்களையும் காட்டாமல் ஒரு மணி நேரம் நிகழ்ச்சி என்பதால் அதனை சுருக்கி சிறிய வீடியோவாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் சுவாரசியமான விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தால் தான் நிகழ்ச்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்பதால் ஒரு ஒரு சிலர் பேசுவதை மட்டுமே வீடியோவில் பாதி நேரம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதனை ரசிகர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 5வில் இந்த வாரம் போட்டியாளர்களின் குடும்பங்கள் வர தொடங்கியுள்ளார்கள். பிக் பாஸ் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் அமீர், பாவணி உறவை பற்றியே பேசுகிறார்கள். அதே போல் பாவனி அக்கா, அம்மா வந்தபோதும் அமீரிடம் சகஜமாகப் பேச வில்லை.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளானார் அமீர். இந்த வீட்டில இதை மட்டும்தான் நான் செஞ்சுக்கிட்டு இருக்கேன் வேற எதுவும் செய்யவில்லை என்று பாவனிடம் அமீர் கேட்கிறார். ஆனால் பாவனி இந்த விஷயத்தில் மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டுள்ளார். அதற்கு பவானி ஒருவேளை நாம் இரண்டு பேரும் பேசுவதை மட்டுமே தான் ஒளிபரப்பப்படுகிறது போல அதனால்தான் பலரும் இதை பற்றியே பேசுகிறார்கள் என கூறினார்

பாவனிடம் பலரும் வந்த அமீரை பற்றி சொன்ன போதும் கோபப்படாமல் நிதானமாக இந்த விஷயத்தை கையாண்டுள்ளார். உடனே அமீர் மேல் கோபப்பட்டு முற்றிலுமாக அவருடன் நட்பை துண்டித்து இருக்கலாம். மக்கள் மத்தியில் பாவனைக்கு நல்ல பெயரும் கிடைத்திருக்கும்.

ஆனால் இதைப்பற்றியெல்லாம் யோசிக்காத பாவணி, என் மனசுல ஒன்னுமில்ல, உன்னை நான் என்னோட நண்பனா தான் பார்க்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியது பவானியின் நற்பண்பை காட்டுகிறது. அதேபோல் அமீர் மீது எந்த குற்றமும் சொல்ல முடியாது. குடும்பம் இல்லாமல் தனியாளாக இருக்கும் அமீருக்கு பாவனியின் பாசத்தால் அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

Trending News