புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பவானி ரெட்டியை பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்திய விஜய் டிவி.. பிக் பாஸ் வீட்டில் காணாமல் போன காரணம் தெரியுமா.?

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் பிரபலமான போட்டியாளராக வலம் வருபவர் பவானி ரெட்டி. விஜய் டிவியின் பல சீரியல்களில் இவருடைய நடிப்பினை நாம் பார்த்து ரசித்து இருந்தோம். அந்த வகையில் தற்போது இவருக்காகவே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் உண்டு.

மிகவும் அமைதியாக வலம் வரும் பவானி ரெட்டி நிகழ்ச்சியின் முதல் நாளே தன்னுடைய கணவரின் இறப்பைப் பற்றி மிகவும் உருக்கமாக கூறினார். மேலும் தன் கணவர் இறந்த அன்று தான் அழவில்லை என்றும் என்ன நடந்தது என்று யோசித்துக்கொண்டே உட்கார்ந்து விட்டேன். தன் கணவருடைய குடும்பம்தான் தனக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறினார்.

குடும்ப வாழ்வு, குழந்தை என வாழ வேண்டிய நேரத்தில் தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டது தன்னுடைய வாழ்க்கையை புரட்டி போட்டதாக வருத்தத்துடன் தெரிவித்தார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் நிகழ்ச்சியின் முழு எபிசோடயும் காண ஆவலாக காத்து இருந்தனர்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பவானி ரெட்டியின் இந்த காட்சி காட்டப்படவில்லை. பவானி ரெட்டிக்கு மொழி பிரச்சனை இருப்பதால் அவருடைய காட்சிகள் காட்டப்படாமல் தவிர்கப்படுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இது போக பிக் பாஸ்ஸன் விதிமுறைகளை ராஜு படிப்பது போன்ற காட்சியும், அபிஷேக்கின் சில காட்சிகளும் நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

pavani-reddy-2
pavani-reddy-2

மக்களை ஏமாற்றுவதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீதும், விஜய் டிவியின் மீதும் ரசிகர்கள் குற்றச்சாட்டினை வைத்து வருகின்றனர். இமான் அண்ணாச்சி கேட்டுக்கொண்டதற்காக தாமரைச்செல்வி எப்படி நடப்பார் என்று பவானி ரெட்டி நடந்து காட்டினார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Trending News